Bayilvan Ranganathan: ‘கேட்டது ஒன்று.. காட்டியது இரண்டு..’ அந்த நடிகையை மீண்டும் வம்பிழுத்த பயில்வான்!
‘இயக்குனர் என்னை ஒரு மார்பை தான் காட்டச் சொன்னார், நான் தான் இரு மார்பையும் காட்டிவிடுகிறேன் என்று கூறினேன்’
சினிமா நடிகர்கள் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஏற்கனவே வம்பிழுத்த அந்த நடிகைப் பற்றி மீண்டும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதோ அவரது பேச்சு:
‘‘வித்தியாச இயக்குனர் படத்தில் மார்பகத்தை காட்டிய அந்த நடிகையை அனைவருக்கும் தெரியும். அவர் எல்லா யூடியூப்பில் பேட்டி அளிப்பார். ‘நான் அந்த இயக்குனரிடம் போய் வாய்ப்பு கேட்டேன். மார்பகத்தை காட்டும் காட்சியாக அது இருக்கும் பரவாயில்லையா? என்று இயக்குனர் கூறினார். சம்மதித்து தான் நான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இயக்குனர் என்னை ஒரு மார்பை தான் காட்டச் சொன்னார், நான் தான் இரு மார்பையும் காட்டிவிடுகிறேன் என்று கூறினேன். 23 முறை அந்த காட்சியை எடுத்தார்கள். எனக்கு எப்படி இருந்தது என்றால், 23 முறை கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு, 24 வது முறை கரு நின்று குழந்தை பிறந்ததைப் போன்று உணர்ந்ததாக’ அந்த நடிகை கூறியிருந்தார்.
வேறு எந்த நடிகையும் செய்திடாத கதாபாத்திரத்தை நான் செய்ததால் சந்தோசப்படுகிறேன், பெருமைப்படுகிறேன் என்றும் அந்த நடிகை கூறினார். என்னைப் பார்த்தவர்கள் தாய்மையை தான் பார்த்திருக்க முடியும், கவர்ச்சியை பார்க்க முடியாது. அவ்வாறு பார்த்தால் அது அவர்கள் கண்ணில் உள்ள பிரச்னை என்று கூறியிருந்தார்.
இது எல்லாம் அந்த நடிகையை பற்றிய பழைய தகவல் தான். புதிய தகவல் என்னவென்றால், அந்த நடிகை பூந்தமல்லி கெஸ்ட் ஹவுஸில் மரணமடைந்த டிவி நடிகையின் நெருங்கிய தோழி தான் அந்த நடிகை. பல டிவி சீரியல்களில் தான் முதலில் அந்த நடிகை நடித்தார்.
இறந்த நடிகைக்கும் அந்த நடிகைக்கும் என்ன சம்மந்தம் என்று இதுவரை யாருமே அவரிடம் கேட்ட வில்லை. இனி வரும் நாட்களில் அந்த நடிகையிடம் இந்த கேள்வியை கேட்பார்கள். ஒரு பெண் தன்னுடைய இரு மார்புகளை காட்டி படத்தில் நடிக்கிறார் என்றால், அது அவருடைய தொழில். மற்றபடி நான் பார்த்த வரை , அந்த படத்தில் வரும் மார்பு காட்சி எனக்கு ஆபாசமாக தெரியவில்லை,’’
என்று அந்த வீடியோ பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
(பயில்வான் கூறிய அந்த நடிகையின் பெயர் மற்றும் அடையாளங்களை தவிர்க்கிறோம்)
டாபிக்ஸ்