Bayilvan Ranganathan: ‘ஒரே ஆண்டில் 5 விவாகரத்து..’ சின்னத்திரை நடிகைகளை டார்கெட் செய்யும் பயில்வான்!
‘அவசரப்பட்டு, ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் வாழ்ந்து, உடல் தேவைக்காக கல்யாணம் செய்து பிரிந்து விடுகிறார்கள்’
சினிமா நடிகர் நடிகைகளை விமர்சனம் செய்து வரும் பயில்வான் ரங்கநாதன், நேற்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சின்னத்திரை நடிகைகளை கடுமையாக சாடியுள்ளார். இதோ அந்த வீடியோவில் இடம் பெற்ற அவரது பேச்சு:
‘‘ஒரே ஆண்டில் டிவி பிரபலங்கள் 5 பேர் விவாகரத்து செய்துள்ளனர். இப்போது, சினிமாவை விட டிவியில் தான் கிசுகிசு அதிகமாக இருக்கிறது. ஏன் என்றால், சினிமா நடிகைகள் கொஞ்சம் பார்த்து யோசித்து, அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்துவிடுகிறார்கள். ஆனால், டிவி நடிகைகள் சேர்ந்தே நடிக்கிறார்கள். அப்போது கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிறது.
அதன் பிறகு, ‘சரி, கல்யாணம் பண்ணிக்காலம்’ என்று பண்ணிக்கிறாங்க. இப்படி ஒரு சூழலில், சின்னத்திரை நடிகர்களின் அசிங்கமான ,அருவெறுப்பான புகார்களும், நடவடிக்கைகளும் உங்களை சந்தோசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஏன் என்றால், எல்லா நடிகர், நடிகைகளும் மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் புகார் சொல்கின்றனர். சமீபத்தில் ஒரு நடிகை, காவல் நிலையத்திற்கு சென்று முன்னாள் கணவன் மீது ஆபாச புகார் அளித்தார். பிறகு அழைத்து விசாரித்தால், அந்த நடிகையின் போனுக்கு அந்த மாதிரி எந்த மெஜேஜூம் வரவில்லை.
‘இனி இந்த மாதிரி புகார் கொடுக்க வந்த தோலை உறித்து விடுவோம்’ என்று போலீசார் எச்சரித்து அனுப்பிவிட்டனர். இந்த மாதிரி நிறைய விசயம் நாத்தம் அடிக்கிறது. பேசவே கூச்சமாக இருக்கு. சரி விசயத்துக்கு வருவோம்.
இரண்டு எழுத்து இன்சியல் நடிகை, கேரளாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து, பிடிக்கவில்லை என்று விவாகரத்து செய்துவிட்டார். அவசரப்பட்டு, ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் வாழ்ந்து, உடல் தேவைக்காக கல்யாணம் செய்து பிரிந்து விடுகிறார்கள்.
இன்னொருவர் பிரபல டிவி தொகுப்பாளரான மூன்றெழுத்து பிரபலம், அவர் ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து, 3 மாதத்தில் மன முறிவு ஏற்பட்டுவிட்டது. ‘நீ லேட்டா வர்ற, 3 மணிக்கு வர்ற’ என்று கணவன் கண்டிக்க, ‘நான் அப்படி தான் வருவேன்’ என்று கூறி, பிரச்னை ஆகி, 3 மாதத்தில் முடிந்து விட்டது.
மற்றொரு 5 எழுத்து பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 6 மாதத்தில் வாழ்க்கை முடிந்துவிட்டது. நண்பர்களாக பிரிந்ததாக பிரிந்து கொண்டார்களாம். விவகாரத்து வாங்கினாலும் அவரின் தொழிலை பாதிக்கவில்லை.
மற்றொருவரும் 5 எழுத்து டிவி தொகுப்பாளர், விவாகரத்து ஆகி மகனுடன் வாழ்ந்து வருகிறார். இப்போது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். வாய்ப்பு வரும் என்று காத்திருக்கிறார். எந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.
இன்னொரு நடிகை பாக்கியமான சீரியலில் நடிக்கும் நடிகை. கல்யாணம் ஆகிவெளிநாட்டில் செட்டில் ஆனாங்க. கணவரிடம் மனமுறிவு ஏற்பட்டு, சென்னை வந்து மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி தான் சின்னத்திரை நடிகைகளின் வாழ்க்கை , தொடங்கிய இடத்தில் முடிந்து விடுகிறது,’’
என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
(அவர் கூறிய நடிகைகளின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது)
டாபிக்ஸ்