தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bade Miyan Chote Miyan Title Track Akshay Kumar Tiger Shroff Bromance And Swag

Bade Miyan Chote Miyan: ஹுக்லைன் இசை ..அனிருத் வாய்ஸ்.. ‘படே மியன் சோட்டே மியன்’ பாட்டு எப்படி இருக்கு ?

HT Tamil Desk HT Tamil
Feb 21, 2024 03:50 PM IST

இந்த பாடலில் வித்தியாசமான ஒலியை விஷால் மிஷ்ரா பயன்படுத்தியுள்ளார். இதற்கு அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்து ஆடி பாடலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர்.

‘படே மியன் சோட்டே மியன்
‘படே மியன் சோட்டே மியன்

ட்ரெண்டிங் செய்திகள்

அபுதாபியின் ஜெராஷ்-ல் உள்ள மிக அழகிய ரோமன் தியேட்டர் பின்னணியில் படமாக்கப்படும், முதல் பாடல் என்ற பெருமையை இந்த பாடல் பெற்று இருக்கிறது. இந்த பாடலில் 100க்கும் அதிகமான கலைஞர்கள் ஆடி இருக்கின்றனர்.

இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஷால் மிஷ்ரா பாடியுள்ளனர். இதற்கு பாஸ்கோ - சீசர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இர்ஷாத் கமில் இந்த பாடலை எழுதி இருக்கிறார்.

இந்த பாடல் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி பேசும் போது, "படே மியன் சோட்டே மியன் பாடல் இளைஞர்களை கவரும் வகையில் பிரமாண்ட காட்சிகளை கொண்டிருக்கும்.

இந்த பாடலில் வித்தியாசமான ஒலியை விஷால் மிஷ்ரா பயன்படுத்தியுள்ளார். இதற்கு அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்து ஆடி பாடலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர். 

அனைவரும் ரசிக்கும் படி இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். இந்த பாடலின் ஹுக்லைன் இசை பிரியர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும்," என்று பேசினார். 

ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து, படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன. இந்த படத்தை அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கியுள்ளார். வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்