Anushka Shetty:வீட்டு வாசலில் பணகெட்டுகள்;அசால்ட் செய்த அனுஷ்கா; ஒரே படத்தில் நொறுங்கிய மார்க்கெட்;அனுஷ்கா வீழ்ந்த கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anushka Shetty:வீட்டு வாசலில் பணகெட்டுகள்;அசால்ட் செய்த அனுஷ்கா; ஒரே படத்தில் நொறுங்கிய மார்க்கெட்;அனுஷ்கா வீழ்ந்த கதை!

Anushka Shetty:வீட்டு வாசலில் பணகெட்டுகள்;அசால்ட் செய்த அனுஷ்கா; ஒரே படத்தில் நொறுங்கிய மார்க்கெட்;அனுஷ்கா வீழ்ந்த கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 24, 2023 06:30 AM IST

அனுஷ்கா வீழ்ந்த கதையை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்து இருக்கிறார்

அனுஷ்கா ஷெட்டி
அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்காவிற்கு ஆரம்பம் முதலில் யோகாவின் மீது அதிகப்படியான விருப்பம் இருந்தது. அந்த விருப்பத்தின் வாயிலாக அவர் பல யோகாக்களை கற்றுக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவர் யோகா ஆசிரியராகவும் மாறினார். 

இந்த நிலையில் தான் பிரபல நடிகரான நாகர்ஜுனா யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டு அதற்கான ஆசிரியரை தேடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அனுஷ்காவின் பெயர் இவருக்கு பரிந்துரை செய்யப்பட, இவர் அவரை சந்தித்து இருக்கிறார். இதனையடுத்து அனுஷ்கா நாகார்ஜுனாவுக்கு யோகா வகுப்புகளை எடுக்க, ஒரு கட்டத்தில் அனுஷ்காவின் அழகை பார்த்த நாகர்ஜுனா அனுஷ்காவிடம் ஏன் நீங்கள் சினிமாத்துறைக்குள் நடிகையாக வரக்கூடாது என்று கேட்டிருக்கிறார். 

இதைக் கேட்ட அனுஷ்கா எடுத்த எடுப்பிலேயே நிச்சயம் அதற்கு எங்கள் குடும்பத்தில் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கறாராக சொல்லி இருக்கிறார். இருப்பினும் நாகர்ஜுனா அனுஷ்காவின் புகைப்படங்களை பல்வேறு சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறார். அதில் ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுஷ்காவைப் பிடித்துப்போக, அவர்கள் தங்களுடைய படத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க ஓகே சொல்லியிருக்கிறார்கள். 

இதனையடுத்து அனுஷ்கா நாகார்ஜுனாவின் வற்புறுத்தலுக்கு இணங்க ஒரு படத்தில் மட்டும் நடிக்கிறேன் என்று சொல்லி அந்த படத்தில் நடித்தார். அந்தப்படம் வெற்றி பெற்றது. இதனையடுத்து பிற மொழிகளில் இருந்து அனுஷ்காவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தன. அந்த வகையில் தமிழில் இயக்குநர் சுந்தர் சி ரெண்டு என்ற படத்தில் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்தார். 

அதற்கு பின்னதாக அவர் நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் அவருடைய மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. பல மொழிகளில் இருந்து பல தயாரிப்பாளர்கள் பணக்கெட்டுகளுடன் அனுஷ்காவை தங்களது படங்களில் புக் செய்ய காத்துக் கொண்டிருந்தனர். 

ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. அவர்கள் கேட்டதெல்லாமே அருந்ததி படம் மாதிரியான ஜானர் கொண்டவை. ஒரு கட்டத்தில் அனுஷ்கா இது போன்ற ஜானர் இனி வேண்டாம் என்று சொல்லி ஒதுக்கி தள்ளினார். அதன் பின்னர் அவர் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக சூர்யாவுடன் இவர் நடித்த சிங்கம் திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. 

அந்தப்படத்திலும் அவர் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். காரணம் சூர்யாவின் உயரம். சூர்யாவின் உயரம் அனுஷ்காவை விட மிகவும் குறைவு. இதனால் பல காட்சிகளில் சூர்யாவிற்கு ஸ்டூல் போட்டு காட்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தப்படத்தின் இயக்குனர் ஹரியே சூர்யாவிற்கு நாங்கள் ஸ்டூல் போட்டோம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

பாகுபலி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. பாகுபலி ஒன்றுக்கும் பாகுபலி இரண்டுக்கும் இடையே ஒரு நீண்ட இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியில் தான் அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் கமிட்டானார். அந்த படத்திற்காக அவர் மிக அதிகமாக உடல் எடையை கூட்டினார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இதுதான் அனுஷ்காவா என்று சொல்லும் அளவிற்கு அவர் அப்படியே தன்னை மாற்றி இருந்தார்.

ஆனால் அந்தப்படத்திற்கு பிறகு அவரால் அந்த உடல் எடையை குறைக்க முடியவில்லை; அதற்கு ஒரு காரணம் இருக்கிறது அது என்னவென்றால் அவர் தற்போது வரைக்கும் இயற்கையாக மட்டும்தான் அந்த உடல் எடையை குறைப்பேன் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையில் அவர் உடல் எடை அதிகரிப்புக்கு என்னென்ன காரணமோ சொல்லி தகவல்கள் வெளியாகின; அதுவரை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியது கிட்டத்தட்ட வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார்.” என்று பேசினார்

நன்றி: ஆகாயம் தமிழ் 

 

Whats_app_banner

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.