Tamil Movies On This Day: தமிழ் சினிமாவின் தாலி செண்டிமெண்ட்.. ஆகஸ்ட் 27 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
Tamil Movies On This Day: ஆகஸ்ட் 27 ஆம் தேதியில் தமிழ் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது. அதன் தொகுப்பினை பார்ப்போம்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதியான இன்றைய தேதியில், 1996 களில் இருந்து தற்போது வரை தமிழில் வெளியாகியிருக்கும் படங்கள் எவை என்பதை பார்க்கலாம். இந்த தேதியில் டாப் ஹீரோக்களான எம்ஜிஆர், ராமராஜன் போன்றோரின் படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த படங்கள் எவை என்பதை பார்க்கலாம்.
தாலி பாக்கியம்
1960 களில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படங்கள் அவரை மிகப் பெரிய உயரத்துக்கு அழைத்து சென்றது. முழுக்க கிராமத்து பின்னணியில் ஹீரோயிசம் இல்லாமல் மிகவும் பாந்தமாக கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் நடித்த படம் தாலி பாக்கியம்.
இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருப்பார். முதல் பிரேம்மிலேயே அழகான மெலடி பாடலுடன் எம்ஜிஆர் - சரோஜா தேவியுடனான காதல் காண்பித்திருப்பார்கள். எம்ஜிஆர் மீது விருப்பம் வைத்திருக்கும் எம்என் ராஜம், அவர் தனது மகளை காதலன் என தெரிந்த பின்னர் தனது விருப்பத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளும், திருப்புமுனைகளும் படத்தின் ஒன்லைன்.