Aranthangi Nisha: வலுக்கும் மணிமேகலை, பிரியங்கா பஞ்சாயத்து - கண்டனம் தெரிவிக்கும் அறந்தாங்கி நிஷா
Aranthangi Nisha: குக் வித் கோமாளி ஷோவுக்கு நான் போகவில்லை. அதனால் அங்கு என்ன நடந்தது என்று எனக்கு இன்னுமும் சரியாக தெரியவில்லை என்றார் அறந்தாங்கி நிஷா

Aranthangi Nisha: மக்களின் விருப்பமான நிகழ்ச்சியில் ஒன்று, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் தொகுப்பாளர் மணிமேகலைக்கும் பங்கேற்பாளர் பிரியங்காவிற்கும் இடையே மோதல் வெடித்து சோசியல் மீடியா வரை சென்றது. இதனால், பலரும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்துகளை பகிர்ந்தும் பதிவிட்டும் வருகின்றனர்.
இதனிடையே மணிமேகலை மற்றும் பிரியங்கா என இருவருக்கும் நெருக்கமாக இருக்கும் அறந்தாங்கி நிஷாவிடம் செய்தியாளர்கள் இன்று ( செப் 27 ) குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் கொடுத்த அறந்தாங்கி நிஷா, “ அங்கு நான் இல்லை. சம்பவம் நடந்த நாளில் குக் வித் கோமாளி ஷோவுக்கு நான் போகவில்லை. அதனால் அங்கு என்ன நடந்தது என்று எனக்கு இன்னுமும் சரியாக தெரியவில்லை. இரண்டு பேரிடமும் நான் பேச வேண்டும் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறேன்.