ஏஆர் ரகுமான் சாய்ரா பானு பிரிவிற்கு இசை கலைஞர் மோகினி காரணம் இல்லை! விளக்கமளித்த வழக்கறிஞர்!
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானுவின் விவகாரத்திற்கு காரணம் பேஸிஸ்ட் மோகினி டே இல்லை என வழக்கறிஞர் வதந்திகளை முடித்து வைத்து உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த நவம்பர் 19 ஆம் தேதி அன்று பிரிந்து விட்டதாக அறிவித்து இருந்தனர். தற்செயலாக, அதே நாளில், ரஹ்மானுடன் பல ஆண்டுகளாக பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாசிஸ்ட் இசை கலைஞர் மோகினி டேயும் தனது திருமணத்தில் இருந்து பிரிவதாக அறிவித்தார். இவை இரண்டிற்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத் தளங்களில் செய்தி பரவியது. தற்போது சாயிராவின் வழக்கறிஞர் அவர்களுக்கு இடையிலான எந்த தொடர்பும் இல்லை என்று இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ரஹ்மான்-சாயிராவின் வழக்கறிஞர்
ரிபப்ளிக் டிவிக்கு வழக்கறிஞர் வந்தனா ஷா அளித்த பேட்டியில், "இந்த இரண்டு விவகாரத்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சாயிராவும் ரஹ்மானும் தாங்களாகவே இந்த முடிவை எடுத்தனர். ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நவம்பர் 19 அன்று மாலை தாங்கள் பிரிவதாக அறிவித்தனர், இது 'அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தம்' என்று குறிப்பிட்டனர்.
29 வயதான மோகினி, கொல்கத்தாவைச் சேர்ந்த பாசிஸ்ட் கலைஞர், கான் பங்களாவின் விண்ட் ஆஃப் சேஞ்சின் ஒரு பகுதியாக உள்ளார். இவர் ரஹ்மானுடன் உலகளவில் 40 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அவரும் கடந்த செவ்வாய் கிழமையன்று இன்ஸ்டாகிராமில், "தனது இசைக்கலைஞர் கணவர் மார்க் ஹார்ட்சுவிடம் இருந்து பிரிந்ததாக ஒரு பதிவில் அறிவித்தார். நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து வழிகளிலும் உங்கள் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நேரத்தில் எங்களிடம் நேர்மறையாக இருப்பதன் மூலமும், எங்கள் தனியுரிமையை மதிப்பதன் மூலமும் நாங்கள் எடுத்த முடிவை மதிக்கவும். எந்த தீர்ப்பையும் நாங்கள் பாராட்ட மாட்டோம்" என்று அவரது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். இந்த இரண்டு அறிவிப்புகளையும் பலரும் இணைத்து தொடர்பு படுத்து பல பதிவுகளை போட்டு வந்தனர். அவை ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக வந்ததால், ரஹ்மான் மற்றும் சாயிராவின் வழக்கறிஞர் இப்போது அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.