Anurag Kashyap: பெண் வெறுப்பு இயக்குநர் முத்திரை.. “ ‘அனிமல்’ பட இயக்குநர் சந்தீப் நேர்மையானவர்” - அனுராக் காஷ்யப்!
Anurag Kashyap: “சந்தீப் நேர்மையானவர். நான் அவரை சந்தித்து பேசினேன். உண்மையில் அவரை எனக்கு பிடித்திருந்தது. அவர் இயக்கிய அனிமல் திரைப்படம் குறித்து, எனக்குத்தோன்றிய கேள்விகளை அவரிடம் கேட்டேன்.” - அனுராக் காஷ்யப்!
அனிமல் திரைப்பட இயக்குநரை பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் பாராட்டி பேசி இருக்கிறார்.
பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் பாலிவுட் இயக்குநர் என்றாலும் கூட, அவர் மொழி கடந்து திரைப்படங்களையும், கதை சொல்லப்படும் விதத்தையும், திரைப்பட ஆளுமைகளையும் கொண்டாடுபவர் ஆவார். அண்மையில் ஜூம் டிவிக்கு பேட்டிக்கொடுத்த அவர், பாலிவுட்டில் பெரும்பான்மையானோரால் ‘டாக்சிக்’ டைரக்டர் என்று அழைக்கப்படும் சந்தீப் ரெட்டி வங்காவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார்
சந்தீப் நேர்மையானவர்
இது குறித்து அவர் பேசும் போது, சந்தீப்பை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. திரைத்துறையில் பெரும்பான்மையான மக்கள், தாங்கள் இல்லாத ஒன்றை, பாசாங்கு செய்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சந்தீப் நேர்மையானவர். நான் அவரை சந்தித்து பேசினேன். உண்மையில் அவரை எனக்கு பிடித்திருந்தது. அவர் இயக்கிய அனிமல் திரைப்படம் குறித்து, எனக்குத்தோன்றிய கேள்விகளை அவரிடம் கேட்டேன். அந்த உரையாடல் கிட்டத்தட்ட 5 மணி நேரம் நீண்டது. நான் எப்போதும் மக்களுடன் உரையாடுவதை நம்புகிறேன்” என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், “ தேவ் டி (2009) படம் வெளியான போது, நான் பெண் வெறுப்பு பிரச்சார படம் எடுத்திருப்பதாக முத்திரை குத்தப்பட்டு, பலரால் நிராகரிக்கப்பட்டேன். மக்கள் யாரையாவது தனிமைப்படுத்துவதையும், ஒருவரைத் தாக்குவதையும் நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால், அது அப்படி இருக்க முடியாது." என்று பேசினார்.
முன்னதாக, ஷாருக்கானை வைத்து படம் எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு அனுராக் காஷ்யப் பதில் கொடுத்திருந்தார். அந்த பேட்டி இங்கே!
இது குறித்து ஹ்யூமன்ஸ் ஆஃப் சினிமா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “ நமது நாடு ஹீரோக்களை வழிபடும் நாடாக இருக்கிறது. நாம் பல விஷயங்களை இழந்து, சுயமரியாதை மற்றும் நம்பிக்கைத்தன்மையில் மிகவும் குறைவாக இருக்கிறோம். நமக்கு ஹீரோக்கள் தேவை.
நமது திரைப்படங்களில் ஏன் கற்பனைக்கு மிஞ்சிய ஹீரோக்கள் இருக்கிறார்கள். திரைப்படங்களில் சூப்பர் ஹீரோக்களாக நடிக்கும் போது, தங்களது முகத்தை மறைக்காத நடிகர்கள், நம் நாட்டில்தான் இருக்கிறார்கள். அவர்களது முகமூடிகள் மிகவும் சிறியதாக இருக்கும். ஏனென்றால் அவர்கள், அவர்களின் முகங்களைக் காண்பிப்பது இங்கு முக்கியம்." என்றார்.
மேலும் ஷாருக்கானை பற்றி பேசிய அவர், சோசியல் மீடியா இப்படி இருக்கும் காலக்கட்டத்தில், பெரிய நடிகர்கள் வைத்திருக்கும் ரசிகர் பட்டாளத்தை பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கிறது. பெரிய நடிகர்கள் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் மீண்டும் மீண்டும் நடிப்பதற்கு அவர்களது ரசிகர்களே காரணம். அவர்கள் தனக்கு பிடித்த நடிகரிடம் இருந்து, அவர் திரையில் முன்னால் செய்து, தாங்கள் கொண்டாடியதை மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கிறார்கள்.
அது நடக்கவில்லை என்றால், ரசிகர்கள் அதை நிராகரிக்கிறார்கள். எனவே நடிகர்கள் கூட புதிய விஷயங்களை முயற்சிக்க பயப்படுகிறார்கள். ஆகையால் ஷாருக்கானின் ஆராவிற்கு வேலை செய்யும் திறன் எனக்கில்லை என்று நினைக்கிறேன். ஒரு வேளை அவர் நடித்த ஃபேன் திரைப்படம் வொர்க் அவுட் ஆகி இருந்தால், அவருடன் வேலை பார்க்கும் தைரியம் எனக்கிருக்கிறது என்று சொல்லி இருக்கலாம்.” என்று பேசினார்
அனுராக் காஷ்யப் பற்றி
பிரபல இயக்குநரான அனுராக் ‘பாஞ்ச்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் அது வெளியாகவில்லை. அவர் இயக்கிய இரண்டாவது படமான ப்ளாக் ஃப்ரைடே திரைப்படம், அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரியதாக இருந்ததால் தணிக்கை சிக்கல்கள் காரணமாக நீண்ட தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது. 1993 நடந்த மும்பை குண்டுவெடிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்தன. அதனைத்தொடர்ந்து தேவ் டி, குலால், கேங்ஸ் ஆஃப் வாசேபூர் - 1 மற்றும் 2, முக்காபாஸ் மற்றும் தோபாரா போன்ற திரைப்படங்களை இயக்கி இவர் புகழ் பெற்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்