படமும் ஹிட் பாட்டும்ஹிட் “அத நான் எதிர்பார்க்கவே இல்ல..” நயனால் நேர்ந்த விபரீதம்; 6000 சேலைகளை அள்ளிச்சென்ற மக்கள்! -அனு
நயன் விஸ்வாஸம் படத்தில் அணிந்திருந்த சேலை குறித்தும், அதை மக்கள் விரும்பி 6000 சேலைகள் விற்பனை ஆன கதையும் படத்தின் ஆடை வடிவைப்பாளர் அனு வர்தன் பேசி இருக்கிறார்.

படமும் ஹிட்டு பாட்டும்ஹிட்“அத நான் எதிர்பார்க்கவே இல்ல..”
நயனால் நேர்ந்த விபரீதம்; 6000 சேலைகளை அள்ளிச்சென்ற மக்கள்! -
கடந்த 2019ம் ஆண்டு அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விஸ்வாஸம்’. முன்னதாக சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியில் வெளியான ‘விவேகம்’ திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், இந்தக்கூட்டணி வெற்றிக்கூட்டணி என்பதை நிரூபிப்பதற்காகவே அஜித் மீண்டும் அந்தப்படத்தில் சிவாவுடன் இணைந்தார்.
அவர்கள் நினைத்தது போலவே ‘விஸ்வாசம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே ஹிட் அடித்தன. குறிப்பாக கண்ணான கண்ணே பாடலுக்காக அந்தப்படத்தின் இசையமைப்பாளர் டி இமானுக்கு தேசிய விருது கிடைத்தது.
