விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா மகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா மகள்

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா மகள்

Aarthi V HT Tamil
May 22, 2022 02:07 PM IST

தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் தன்னை விமர்சனங்கள் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

<p>அர்ச்சனாவின் மகள்</p>
<p>அர்ச்சனாவின் மகள்</p>

இதனால் கடுப்பான அர்ச்சனாவின் மகள் ஜாரா, நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், "அனைவருக்கும் ஹலோ. எங்களை வெறுக்கும் நபர்களுக்காக ஒரு சின்ன பதிவு. நானும், எனது அம்மாவும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் புரோமோ வெளியானது. 

அதை வைத்து பலரும் கடுமையாக விமர்சனங்கள் செய்து இருந்தீர்கள். அதில் நிறைய பெண்கள் எங்களை வெறுத்துப் பதிவு செய்து இருக்கின்றனர். என் அம்மாவையும், என்னையும் விமர்சிக்க அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை சொல்ல முடியாது. 

இரண்டு குழந்தைகள் பெற்ற தாய் கூட எங்களை பெண்கள் என்று பாராமல் விமர்சித்து இருந்தார். நாங்கள் எப்போதும் எங்கள் வாழ்வில் அன்பை மட்டுமே வரவேற்க விரும்புகிறோம். எங்களை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நாங்கள் உங்களின் உணர்வை மதிக்கிறோம். ஆனால் உங்களுக்கு எங்கள் மீதுள்ள வெறுப்பை நீங்கள் மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். 

அதை பொது வெளியில் கொட்டி எங்களை காயப்படுத்த வேண்டாம். நாங்கள் வெறுப்பை ஊக்குவிக்க மாட்டோம். ஆனால், சிலர் எங்களை எப்போதும் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். அப்படி ஆதரிப்பவர்களுக்கு எங்களது அன்பைச் சொல்லி ஆரத் தழுவிக் கொள்கிறோம். எங்களை நேசிப்போரின் அன்பு எங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.