அமுதா சொன்ன வார்த்தை.. செந்திலை வெளியே தள்ளிய இளங்கோ
அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அன்னம் அமுதாவிடம் பேச அவள் அமைதியாக இருக்க வடிவேல் சைகையில் அவள் காலில் விழ சொல்ல, அன்னம் விழப்போக அப்போது செந்தில் வருகிறான்.
சிதம்பரம் மயங்கி விழுந்த விசயத்தை சொல்ல அமுதா பதறியபடி அங்கிருந்து கிளம்புகிறாள். இதனால் வடிவேல் தன்னுடைய திட்டம் சொதப்பியதாக வருத்தபடுகிறான்.
அதை தொடர்ந்து ஹாஸ்பிடலில் அப்பாவை ICU-வில் வைத்திருப்பதை பார்த்து அமுதா அழுகிறாள். மேலும் சிதம்பரம் வடிவேல் காலில் விழுந்ததால் மனமுடைந்து இப்படி ஆகிவிட்டார் என சொல்ல அதை கேட்டு இளங்கோ நாகு அதிர்ச்சியாகின்றனர்.
ஹாஸ்பிடல் வெளியே அன்னம், மாணிக்கம், செந்தில் மூவரும் சிதம்பரத்தை பார்க்க உள்ளே நுழைய இளங்கோ கோபத்துடன் வருகிறான்.
எங்க அப்புச்சியை அவமானப்படுத்தி விட்டு இப்ப உசிரோட இருக்காரா இல்லையான்னு பார்க்க வந்தீங்களா மரியாதையா இங்கிருந்து கிளம்பிருங்க என செந்தில் உட்பட மூவரையும் பிடித்து வெளியே தள்ளுகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்