என்னதான் துப்பாக்கிய வாங்கினாலும் விஜய் தான் டாப்பு.. இந்த ஏரியா அந்த ஏரியா எந்த ஏரியாவிலும் ஐயா கில்லி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  என்னதான் துப்பாக்கிய வாங்கினாலும் விஜய் தான் டாப்பு.. இந்த ஏரியா அந்த ஏரியா எந்த ஏரியாவிலும் ஐயா கில்லி!

என்னதான் துப்பாக்கிய வாங்கினாலும் விஜய் தான் டாப்பு.. இந்த ஏரியா அந்த ஏரியா எந்த ஏரியாவிலும் ஐயா கில்லி!

Malavica Natarajan HT Tamil
Nov 01, 2024 11:29 AM IST

தமிழில் வெளியான டாப் ஹீரோக்களின் படங்களில் அதிகளவு புக்கிங் செய்த முதல் 10 படங்களின் பட்டியலை புக் மை ஷோ வெளியிட்டுள்ளது.

என்னதான் துப்பாக்கிய வாங்கினாலும் விஜய் தான் டாப்பு.. இந்த ஏரியா அந்த ஏரியா எந்த ஏரியாவிலும் ஐயா கில்லி!
என்னதான் துப்பாக்கிய வாங்கினாலும் விஜய் தான் டாப்பு.. இந்த ஏரியா அந்த ஏரியா எந்த ஏரியாவிலும் ஐயா கில்லி!

அப்படி இந்த ஆண்டு வெளியான முக்கிய நடிகர்களின் படங்களை தியேட்டர்களில் காண மக்கள் எவ்வளவு ஆர்வம் காட்டியுள்ளனர் என்பதை அந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனே சொல்லிவிடும். ஆனால், தற்போது, படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே, ப்ரீ புக்கிங் நடந்துவிடுகிறது. முன்பு போல் இல்லாமல் ரசிகர்கள் தாங்கள் விரும்பும் படங்களைக் காண அவர்களுக்கு பிடித்த தியேட்டர்களையும், பிடித்த இருக்கைகளையும் வீட்டில் இருந்தபடியே படம் ரிலீஸ் அவதற்கு முன்கூட்டியே புக் செய்து கொள்ள முடியும்.

அந்தவகையில், இந்த ஆண்டு தியேட்டர்களில் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் ஆன்லைன் டிக்கெட் மூலம் எவ்வளவு புக் செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலை புக் மை ஷோ தளம். இந்த பட்டியலின்படி, இந்த ஆண்டு வெளியான முக்கிய தமிழ் படங்கள் முதல்நாள் புக் மை ஷோ மூலம் எவ்வளவு டிக்கெட்டை விற்பனை செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

10.பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது சுந்தர்.சியின் அரண்மனை 4. குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைக் கவரும் வகையில், எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல் நாளில் மட்டும் சுமார் 1 லட்சத்து 9 ஆயிரம் பேர் புக் மை ஷோவில் டிக்கெட் புக் செய்துள்ளனர்.

9.அடுத்தபடியாக 9வது இடத்தில் உள்ளது விஜய் சேதுபதியின் மகாராஹா திரைப்படம். தன் மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியவரை கண்டுபிடிக்க துடிக்கும் தந்தையாக நடித்திருப்பார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை தியேட்டரில் காண புக் மை ஷோ தளம் மூலம் 1 லட்சத்து 15 பேர் டிக்கெட் பதிவு செய்துள்ளனர்.

8. இந்தப் படத்திற்கு அடுத்தபடியாக, சிவகார்த்திகேயனின் அயலான் படம் உள்ளது. ஏலியன் கதையை மையமாக வைத்து குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கும் 1 லட்சத்து 15 ஆயிரம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

7. இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் கேப்டர் மில்லர் திரைப்படம் உள்ளது. இந்தத் திரைப்படம் அதன் முதல் நாளில் மட்டும் புக் மை ஷோ தளம் மூலம் 1 லட்சத்து 37 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளது.

6. இதையடுத்து, கோலார் தங்க சுரங்கத்தின் ஆதிக் கதையை மையமாக வைத்து பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட தங்கலான் திரைப்படம் உள்ளது. வித்தியாசமான கெட்டப்பில் வந்த விக்ரம் அனைவரையம் ஈர்த்த நிலையில், இந்தப் படத்தை பார்க்க 1 லட்சத்து 98 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

5. தொடர்ந்து 5ம் இடத்தில் தனுஷின் ராயன் படம் இடம்பெற்றுள்ளது. தனுஷின் 50வது படமான ராயனை தனுஷே இயக்கி நடித்திருப்பார். இதனால், படத்தின் எதிர்பார்ப்பு கூடியதை அடுத்து சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் ராயன் படத்திற்கான டிக்கெட்டை புக் மை ஷோ தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

4. அடுத்து 4வது இடத்தில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கமல் ஹாசன் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படம் உள்ளது. இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க 4 லட்சத்து 3 ஆயிரம் பேர் டிக்கெட் புக் செய்துள்ளனர்,

3. இதையடுத்து 3வது இடத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் திரைப்படம் உள்ளது. நீட் தேர்வு, எண்கவுண்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வேட்டையன் படத்தை தியேட்டரில் பார்க்க 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் டிக்கெட் புக் செய்துள்ளனர்.

2. இந்தப் பட்டியலில் 2ம் இடத்தைப் பிடித்துள்ளது திபாவளியை முன்னிட்டு நேற்று தியேட்டரில் வெளியான அமரன் படம். மறைந்த ராணுவ வீரரின் உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தியேட்டரில் காண சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. பட்டியலின் முதல் இடத்தில் நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் உள்ளது. இந்தப் படத்தை சுமார் 5 லட்சத்து 84 ஆயிரம் பேட் முன்பதிவு செய்து பார்த்துள்ளனர். புக் மை ஷோ வெளியிட்டுள்ள இந்த புள்ள விவரத்தை கண்ட நெட்டிசன்கள், விஜய்யிடம் சிவகார்த்திகேயன் துப்பாக்கி வாங்கியிருக்கலாம், ஆனால், அவரால் விஜய் ஆக முடியாது என கூறி வருகின்றனர். அதே சமயத்தில் ஒரு வளர்ந்து வரும் நடிகர், ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் செய்த ரெக்கார்டை இவ்வளவு எளிதில் உடைப்பதைக் கண்டு திகைத்ததுடன், வருங்காலத்தில் சிவகார்த்திகேயனுக்கு தவிர்க்க முடியாத இடம் சினிமாவில் உண்டு எனக் கூறி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.