Amala Paul on Telugu Films: டோலிவுட் குறித்து அமலாபால் பரபரப்பு குற்றச்சாட்டு
நடிகை அமலாபால் டோலிவுட் சினிமாவில் நாயகிகளை கவர்ச்சியாக காட்டினார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
அமலாபால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு சினிமா குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்து உள்ளார்.
இது குறித்து அவர் ஒரு புதிய நேர்காணலில், “தெலுங்கு திரைத்துறைக்கு சென்ற போது குடும்பக கருத்து இருப்பதை உணர்ந்தேன். அங்கு தொழில், குடும்பங்கள் என பிரித்து பார்ப்பது இல்லை. நான் அங்கு படம் நடித்த நேரத்தில் அவர்கள் தயாரித்த படங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன.
எப்பொழுதும் இரண்டு நடிகைகள் தான் இருப்போம். காதல் காட்சிகள், பாடல்கள் என எல்லாமே மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அவை மிகவும் கமர்ஷியல் படங்கள். அந்த நேரத்தில் என்னால் அந்தத் துறையுடன் அதிகம் இணைய முடியவில்லை. அதனால் நான் அங்கு மிகக் குறைவான படங்களே செய்தேன்” என்றார்.
தொடர்ந்து அவர் தமிழ் துறையில் அந்த போராட்டங்களை எதிர்கொள்ளவில்லை என்பதையும் கூறினார். அவர் கூறுகையில், “அதிர்ஷ்டவசமாக நான் தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானபோது, திரைப்பட தயாரிப்பாளர்கள் புதுமுகங்களை ஆராயும் நேரத்தில் வரவில்லை. ஆடிஷன்களில் ஒரு வருடம் சென்றது.
ஆனால் அடுத்த வருடத்திலிருந்து எனக்கு சலுகைகள் வர ஆரம்பித்தன. நான் அப்போது இரண்டு படங்களில் நடித்தேன். அது இன்னும் வெளியாகவில்லை. அதன் பிறகு எனது மூன்றாவது படமான மைனா ஒரு பிளாக் பஸ்டர் படமாக மாறியது. அது என்னை ஒரே இரவில் நட்சத்திரமாக்கியது. அதனால், எனக்கு நிறைய சலுகைகள் வர ஆரம்பித்தன. நான் ஒரு நடிகையாக ஏற்றுக் கொள்ளப்பட்டேன்” என்றார்.