கட்டியணைத்து கதறிய மனைவி.. ஓடி வந்த மகன்..முத்தமழையில் நனைந்த அல்லு அர்ஜுன்
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் அளித்த போதும், சிறை விதிகளின்படி, அவர் நேற்றைய இரவு சிறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
புஷ்பா 2 பிரீமியர் காட்சியை காண்பதற்காக அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்திருந்தார். எந்த முன்னறிவிப்பும் இன்றி,அவர் அங்கு வந்ததால், அங்கு அதிகமாக கூட்டம் கூடியது. இந்த கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண்மணி இறந்தார். அவர் இறந்தது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அல்லு அர்ஜுன் கைது
அதன்படி, நேற்றைய தினம் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, அவர் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் அளித்த போதும், சிறை விதிகளின்படி, அவர் நேற்றைய இரவு சிறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இரவில் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன், இன்று அதிகாலை ஜாமீனில் வெளியே வந்தார். அவர் சிறைக்குச் செல்லும் பொழுது, தன்னுடைய மனைவியான சினேகா ரெட்டிக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அவர் இன்று காலை சிறையில் இருந்து வீட்டிற்கு வந்த போது, அவரது மனைவி அவரைக் கட்டி அணைத்து, கதறி அழுதார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அல்லு அர்ஜுன், செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, "எனக்கு ஆதரவாக நின்ற ஒவ்வொருவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கவலைப்படுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை
கவலைப்படுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். சட்டத்தை மதித்து அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. மீண்டும் என்னுடைய இரங்கலை இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். இது நடந்திருக்கக் கூடாது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என்று பேசினார்.
நடந்தது என்ன?:
உலகெங்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸானது. அதில் குறிப்பாக தெலங்கானாவில் ரசிகர்களுக்காக டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படத்துக்கான பிரிமீயர் ஷோக்கள் போடப்பட்டன. அதனால், அந்த காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படம் பார்க்க ஹைதராபாத்தில் ஆர்.டி.சி. கிராஸ் ரோட்ஸில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வந்தார். இதனை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அங்கு அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்து நெரிசல் ஏற்பட்டது.
அதில் ஹைதராபாத்தின் எல்.பி.நகரில் வசிக்கும் ரேவதி என்கிற இளம்பெண், டிசம்பர் 4 ஆம் தேதி, படம்பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகன் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். போலீசார் சிபிஆர் சிகிச்சை செய்து சிறுவனை மீட்டனர்.
அல்லு அர்ஜுன் மீது எழுந்த குற்றச்சாட்டுகள்:
அல்லு அர்ஜுன் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் இல்லாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அல்லு அர்ஜுனை டிசம்பர் 13ஆம் தேதி காலையில் அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
என்னென்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு:
அல்லு அர்ஜுன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் பிரிவுகள் 105, 118 (1) மற்றும் 3 (1) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததற்காக அவரை கைது செய்வதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்தனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன்:
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டபோது சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டின் முதல் மாடியில் உள்ள அல்லு அர்ஜுனை நெருங்கிய அதிரடிப் படையினர், ஹைதராபாத் சிக்கடபள்ளி போலீசார் அவரை கைது செய்வதாக தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.
படுக்கை அறையில் இருந்த அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். வீட்டில் ஷார்ட்ஸ் அணிந்திருந்த அல்லு அர்ஜூனை லிப்டில் இருந்து கீழே இறங்கிய போலீஸார், பின்னர் அவரது ஆடைகளை மாற்ற பணித்தனர். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அல்லு அர்ஜுனின் தந்தை அரவிந்த் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
மேலும், சந்தியா தியேட்டரில் நடந்த இந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என்று போலீசார் விளக்கம் அளித்தனர். அதன்பின், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது தந்தையும் போலீஸ் வாகனத்தில் சென்றனர்.