‘விண்வெளி நாயகா.. புயலை கிளப்பும் புறாக்கூட்டம்.. சீறும் சிலம்பரசன்..’ - தக் லைஃப் டீசர் இங்கே! - ரிலீஸ் எப்போது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘விண்வெளி நாயகா.. புயலை கிளப்பும் புறாக்கூட்டம்.. சீறும் சிலம்பரசன்..’ - தக் லைஃப் டீசர் இங்கே! - ரிலீஸ் எப்போது?

‘விண்வெளி நாயகா.. புயலை கிளப்பும் புறாக்கூட்டம்.. சீறும் சிலம்பரசன்..’ - தக் லைஃப் டீசர் இங்கே! - ரிலீஸ் எப்போது?

Kalyani Pandiyan S HT Tamil
Published Nov 07, 2024 11:26 AM IST

கமல்ஹாசன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் டீசர் வெளியாகி இருக்கிறது; அத்துடன் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

‘விண்வெளி நாயகா.. புயலை கிளப்பும் புறாக்கூட்டம்.. சீறும் சிலம்பரசன்..’ -  தக் லைஃப் டீசர் இங்கே! - ரிலீஸ் எப்போது?
‘விண்வெளி நாயகா.. புயலை கிளப்பும் புறாக்கூட்டம்.. சீறும் சிலம்பரசன்..’ - தக் லைஃப் டீசர் இங்கே! - ரிலீஸ் எப்போது?

நடிகர், பாடகர், இயக்குநர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களை கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். அவர் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு, கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்து உருவாக்கியுள்ள தக் லைஃப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இணைந்த கூட்டணி

முன்னதாக, மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இவரும், கமல்ஹாசனும் இணைந்து 1987ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு, இன்றும் அனைவராலும் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக் திரைப்படமாக இருக்கிறது. ஆனால், அதன் பின்னர் இந்தக்கூட்டணி இணையவே இல்லை. இந்த நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக்கூட்டணி இணைய இருப்பதாகவும், படத்திற்குதக் லைஃப் என்று பெயர் வைத்திருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

படப்பிடிப்பு

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிவரும் தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி, ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், மொத்த படத்திற்கான படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, டப்பிங், எடிட்டிங் உள்ளி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளையும் படக்குழு தீவிரப்படுத்தி வருகிறது.

கைகோர்த்த சிம்பு

தக் லைஃப் படத்தில் கமல் ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடிப்பதாகவும், சிம்புவின் ஜோடியாக திரிஷா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் அபிராமி, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், ரவி கே. சந்திரன் இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கொண்டாட்டம்

தக் லைஃப் படத்தின் நாயகனான கமல் சினிமாவிற்கு அறிமுகமாக 65 ஆண்டுகள் ஆனதை படக்குழுவினர் சிறப்பாக கொண்டாடினர். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெரும் புள்ளியாக உள்ள கமல் ஹாசன் இதுவரை 233 படங்களில் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சாதனை

தக் லைஃப் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 149 கோடியே 70 லட்ச ரூபாய்க்கு பெற்றுள்ளது. இதுவரை மற்ற படங்கள் பெற்ற டிஜிட்டல் உரிமைக்கான தொகையைக் காட்டிலும் இது அதிகம் என்பதால் படக்குழுவினர் உற்சாகத்துடன் படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.