Ram Charan: குளோபல் ஸ்டாரான ராம் சரண் - ஆஸ்கர் அகாடமியின் பிராண்ட் நடிகர்கள் பட்டியலில் தேர்வு
ஆஸ்கர் அகாடமியின் பிராண்ட் நடிகர்கள் பட்டியலில் ராம்சரண் இணைந்துள்ளார்.
ஆஸ்கர் அகாடமியின் பிராண்ட் நடிகர்கள் குழுவின் புதிய உறுப்பினராக, ராம் சரண் மாறியுள்ளார்.
இதற்கான அறிவிப்பினை ஆஸ்கர் அகாடமி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளது. அந்த புதிய உறுப்பினர்கள் பட்டியலில், லஷானா லிஞ்ச் மற்றும் லூயிஸ் கூ டின் லோக் போன்ற உலக நடிகர்களுடன் ராம் சரண் இணைந்துள்ளார்.
ராம் சரணுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ஜூனியர் என்.டி.ஆர் பிராண்ட் நடிகர்கள் குழுவில் இணைந்தனர். ராம்சரணும் ஜூனியர் என்.டி.ஆரும், RRR படத்திற்காக ஹாலிவுட்டில் பாராட்டப்பட்டனர்.
முன்னதாக இந்தாண்டு மார்ச் மாதம், RRRஇன் நாட்டு நாட்டு, சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படப் பாடலாக அமைந்தது.
ஆஸ்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய நடிகர்களின் பட்டியலை அறிவிக்கும் பதிவில், “ புதிய பிராண்ட் நடிகர்களின் நுணுக்கமான சித்தரிப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கான அர்ப்பணிப்பு மூலம், இந்த நடிகர்கள் நம் இதயங்களிலும் மனதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை நமக்கு பரிசளிக்கிறார்கள். அவர்களின் கலை வடிவத்தின் தேர்ச்சி சாதாரண தருணங்களை அசாதாரண சினிமா அனுபவங்களாக மாற்றுகிறது. மனித உணர்ச்சிகளின் ஆழம் மற்றும் சிக்கலான தன்மைக்கான நமது பாராட்டுகளை வளப்படுத்துகிறது. லஷானா லிஞ்ச், ராம் சரண், விக்கி க்ரீப்ஸ், லூயிஸ் கூ டின்-லோக், கேகே பால்மர், சாங் சென், சகுரா ஆண்டோ மற்றும் ராபர்ட் டேவி ஆகிய இந்த திறமையான கலைஞர்களை ஆஸ்கர் அகாடமியின் பிராண்ட் நடிகர்கள் கிளைக்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’’ என்றார்.
ஜூனியர் என்டிஆர் ஏற்கனவே பிராண்ட் நடிகர்களின் பட்டியலில் உள்ளார்:
கடந்த அக்டோபர் 18அன்று, ஆஸ்கர் குழுவின் இன்ஸ்டாகிராமில், பிராண்ட் நடிகர்களின் புதிய உறுப்பினர்களின் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. அதில் நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் கே ஹுய் குவான், மார்ஷா ஸ்டெபானி பிளேக் மற்றும் ரோசா சலாசர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் அவரைப் பட்டியலில் பார்த்து மகிழ்ச்சியடைந்த நிலையில், அந்த நேரத்தில் பலர் ராம் சரண் ஏன் இன்னும் பட்டியலில் இல்லை என்று கேட்க கருத்துகள் பதிவிட்டனர்.
ஆஸ்கர் அகாடமியின் பிராண்ட் நடிகர்கள் பட்டியலில் ராம் சரண் சேர்ந்தார் என்ற செய்தி வெளியானதில் இருந்து, அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதில் ஒருவர், 'குளோபல் ஸ்டார் ராம் சரண்' என்ற ஹேஷ்டேக்குடன் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டார்.
மற்றொரு ரசிகர் X-ல் எழுதியதாவது, "உண்மையான மற்றும் உலகளாவிய கேம்சேஞ்சர். ஆஸ்கர் அகாடமி, ஒரே ஒரு உலகளாவிய நட்சத்திரமான ராம் சரணை அவர்களின் பிரமாண்ட நடிகர்களின் பட்டியலில் வரவேற்கிறது. இது மிகப்பெரிய சாதனை" என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.