Adah Sharma: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் தங்கியிருந்த பிளாட்டை வாங்கியிருக்கும் பாலிவுட் நடிகை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Adah Sharma: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் தங்கியிருந்த பிளாட்டை வாங்கியிருக்கும் பாலிவுட் நடிகை

Adah Sharma: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் தங்கியிருந்த பிளாட்டை வாங்கியிருக்கும் பாலிவுட் நடிகை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 26, 2023 04:44 PM IST

பந்த்ரா பகுதியில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தங்கியிருந்த வீட்டை வாங்கியுள்ளராம் பிரபல பாலிவுட் நடிகையான அடா ஷர்மா. அவர் எப்போது அங்கு குடியேற போகிறார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

பாலிவுட்  நடிகை அடா ஷர்மா
பாலிவுட் நடிகை அடா ஷர்மா

கடந்த மே மாதம் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் மூலம் பிரபலமான இவர் நடித்திருக்கும் புதிய வெப்சீரிஸான கமாண்டே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிஸ் கடந்த வாரம் வெளியானது.

இதையடுத்து மறைந்த பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் 2020இல் இறப்பதற்கு முன் மும்பையில் தங்கியிருந்த பிளாட்டை அடா ஷர்மா வாங்கியுள்ளாராம். மும்பை பந்த்ரா பகுதியில் இருக்கும் மாண்ட் பிளாங்க் அப்பார்ட்மெண்டில் , சுஷந்தா குடியிருந்த வீட்டை இவர் வாங்கியிருப்பதாக பாப்ராஸி (பிரபலங்களை பின் தொடரும் புகைப்படகாரர்கள்) பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்த தகவல் வைரலான நிலையில், இதனை அடா ஷர்மாவுக்கு நெருக்கமானவர்களும் உறுதிபடுத்தியுள்ளனர். அதேசமயம் அவர் எப்போது அங்கு குடியேறபோகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.