Yashika: ஷூட்டிங்கில் யாஷிகா.. பாலியல் சீண்டல்.. என்ன நடந்தது தெரியுமா?-actress yashika aannand has spoken about the physical harassment she experienced at the age of 13 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yashika: ஷூட்டிங்கில் யாஷிகா.. பாலியல் சீண்டல்.. என்ன நடந்தது தெரியுமா?

Yashika: ஷூட்டிங்கில் யாஷிகா.. பாலியல் சீண்டல்.. என்ன நடந்தது தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2024 03:07 PM IST

நடிகை யாஷிகா ஆனந்த் 13 வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஆனந்த்

துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து முகம் தெரியும் நாயகியாக பிரபலமடைந்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக கவர்ச்சியாக நடித்து அனைத்து இளைஞர்களும் தன் வசம் இழுத்தார்.

அதற்குப் பிறகு சில படங்களில் கவர்ச்சி நடனங்கள் ஆடி சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு மிகப்பெரிய இளைஞர்கள் கூட்டத்தை ரசிகர்களாக வைத்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி விட்டார். சினிமா மட்டுமல்லாது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கவர்ச்சி உடைகள் அணிந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை கொடுத்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வெளியே தனது நண்பருடன் காரில் சென்ற போது இவருக்கு விபத்து ஏற்பட்டது. இவருடன் காதல் சென்ற தோழி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த யாஷிகா ஆனந்த் பல நாட்கள் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.

தற்போது மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வரும் இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்த வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் நடிகர் சந்தானம் நடித்த இனிமை இப்படித்தான் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த ஒருவர் தவறான இடத்தில் கை வைத்தார்.

எனக்கு 13 வயது என்கின்ற காரணத்தினால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அது எந்த வகையான டச் என்று கூட எனக்கு தெரியவில்லை. உடனே என்னை தவறாக தொட்ட நபரை நான் உதைத்து விட்டேன். அவர் என்னை திருப்பி கேள்வி கேட்க முடியாது ஏனென்றால் அவர் தவறு செய்திருக்கிறார். சிறுவயதில் இருக்கும் பொழுதே நான் துணிவோடு அவர்களை எதிர்த்து பாலியல் சிங்களுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் துணிவோடு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்

விபத்து முடிந்த பிறகு வெளியே வந்த யாஷிகா ஆனந்த் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவை அனைத்தும் எனது ரசிகர்களுக்காக மட்டுமே என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.