தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Vichithra Latest Interview About Why You Ask Sorry To Dinesh In Bogboss Kondattam In Rachitha Contraversy

Actress Vichithra: ‘தினேஷ் - ரச்சிதா விஷயத்தை ரத்தகளரியாக்கி.. அப்படி ஒன்னும் நான் பெரிய குற்றம்’ - விசித்ரா பளார்

Kalyani Pandiyan S HT Tamil
Mar 29, 2024 05:45 AM IST

அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசும்பொழுது நமக்கு நிச்சயம் கடுப்பாகும். அந்த விஷயம் தெரிந்தோ, தெரியாமலோ நடந்து விட்டது. சில கசப்பான சம்பவங்கள் நம்மை அப்படி பேச வைத்து விடும்.

பிக்பாஸ் விசித்ரா
பிக்பாஸ் விசித்ரா

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து லிட்டல் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “பிக் பாஸ் கொண்டாட்டத்தில் நான் தினேஷிடம் சாரி கேட்டது குறித்து மிகவும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அங்கு ஒன்றுமே ஆகவில்லை. சில காரணங்களால் என்னுடைய சோசியல் மீடியாவில், அந்த விவகாரத்தை குறிப்பிட்டு அடிக்கடி தவறான கமெண்ட்கள்  வந்து கொண்டே இருக்கின்றன. 

ஆனால் என்னுடைய ரசிகர்களோ, நான் ஏன் தினேஷிடம் சாரி கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவ்வளவு பிரச்சினைகளையும், சர்ச்சைகளையும் கடந்து வெளியே வந்திருக்கிறோம். 

ஆனால் அதன் பின்னரும் மீடியா அதனை கிளறி இரத்தக்களரியாக்கி, அதுகுறித்தான அவர்களுடைய கருத்து என்ன, இவர்களுடைய கருத்து என்ன என்று கேட்டு எழுதுகிறார்கள். அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசும்பொழுது, நமக்கு நிச்சயம் கடுப்பாகும். அந்த விஷயம் தெரிந்தோ, தெரியாமலோ நடந்து விட்டது. சில கசப்பான சம்பவங்கள் நம்மை அப்படி பேச வைத்து விடும்.

அந்த மூன்று மாதங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தது என்பது ஒரு கேம். அங்கு என்ன நடக்கிறது என்பது நம் கையில் இல்லை. ஆனால் நல்ல வேளையாக நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் பொழுது, நல்ல பேரை சம்பாதித்துக் கொண்டுதான் வெளியே வந்தேன். ஆனால் என்னை குறி வைத்து தாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த விஷயத்தை கையில் எடுப்பார்கள். 

அதற்கு நான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தேன். என் குடும்பத்தோடு நான் இருக்கும் போட்டோவை சோசியல் மீடியாவில் பகிரும் போது, இவர் மட்டும் குடும்பத்தோடு மிகவும் சந்தோஷமாக இருப்பாரோ… போன்ற கமெண்ட்களை பார்க்கிறேன். அதனை கண்டுகொள்ளாமல் சென்று விடலாம் என்று நினைத்தாலும், அது என்னுடைய குழந்தைகளை பாதிக்கிறது. எனக்கு என்னுடைய குழந்தைகள், குடும்பம் மிகவும் முக்கியம். அதற்கு நான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த நல்ல எண்ணத்தின் வழியாகத்தான் நான் தினேஷிடம் சாரி கேட்டேன். ஏன் நீங்கள் தினேஷிடம் சாரி கேட்க செல்ல வேண்டும் என்று பலர் சொன்னார்கள். ஆனால் நான் உண்மையானவள். 

பிக் பாஸ் வீட்டின் உள்ளேயே நான் பலரிடம் சாரி கேட்டு இருக்கிறேன். தினேஷை நான் போனில் அழைத்து சாரி கேட்டு இருக்கலாம். ஆனால் நான் அப்படி ஒன்றும் பெரிய குற்றம் செய்யவில்லை. ஒரு விஷயம் சாரி கேட்பதால் முற்றுப்புள்ளி  வைக்கப்படும் என்றால் அதனை செய்யலாம்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்