Vadivukkarasi: "கூனுக்கு மாவுக்கட்டு மலை.. நிமிரவே முடியல...ரஜினி சொன்ன அந்த வார்த்தை" - வடிவுக்கரசி!
எலும்பு முறிவு சிகிச்சைக்கு மாவுக்கட்டு போடுவார்களே, அந்த மாவை ஒரு குட்டி மலை போல செய்து, அதற்குள் பஞ்சை வைத்து அடைத்து, என் முதுகில் வைத்தார்கள்.

'அண்ணாமலை' திரைப்படத்தில் ரஜினி உடன் கூன் விழுந்த கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து, நடிகை வடிவுக்கரசி Provoke tv யூடியூப் சேனலுக்கு, அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, "நடிகர் சூர்யா 'பேரழகன்' திரைப்படத்தில், கூன் வைத்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்போதெல்லாம் அது போன்று நடிப்பதற்கான வசதிகள் ஓரளவுக்கு வந்து விட்டன; ஆனால், நான் ' அருணாச்சலம் ' திரைப்படத்தில் நடிக்கும் பொழுது, அது போன்ற வசதிகள் எல்லாம் பெரிதாக கிடையாது.
மாவுக்கட்டு போடக்கூடிய மாவு:
எலும்பு முறிவு சிகிச்சைக்கு மாவுக்கட்டு போடுவார்களே, அந்த மாவை ஒரு குட்டி மலை போல செய்து, அதற்குள் பஞ்சை வைத்து அடைத்து, என் முதுகில் வைத்தார்கள். அப்படித்தான் அந்த கதாபாத்திரத்தை கூன் விழுந்த கதாபாத்திரமாக மாற்றினார்கள். அதை முதுகில் வைத்துக்கொண்டு அதற்கு மேலே என்னுடைய ஜாக்கெட்டைஅணிய வேண்டும். அதற்கு மேலே கதாபாத்திரத்திற்கான ஜாக்கெட்டை அணிய வேண்டும்.