Actress Seetha: ‘ரேப் பண்ணவன் கூட வாழலாம்னு ஓகே சொன்னேன்’ நடிகை சீதா ஓப்பன் டாக்!
என் அப்பாவிடம் போய், ‘அப்பா நான் வேண்டாம்னு சொன்னேன், நீ கேட்கல,’ என அழுதேன். அதன் பின் நான் மாடர்ன் ஆடைகள் அணிந்து நடிக்கவில்லலை.
நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி, பிரபல நடிகை சீதா, பிரபல யூடியூப் தளத்திற்கு சமீபத்தில் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘முதல் படம் ஆண் பாவத்தில் எனக்கு புரியாத விசயங்கள் எல்லாம் அடுத்தடுத்த படங்களில் தான் புரிந்து கொண்டேன். அதன் பின் தான் பாண்டியராஜன் சார் எனக்கு தெய்வமா தெரிந்தார். படித்துக் கொண்டிருந்த போது தான் சினிமாவுக்கு வந்தேன். வந்த பின் நான் படிக்க போகவில்லை. ஏன் என்கிற காரணம் தெரிந்தால் சிரிப்பீர்கள்.
ஷூட்டிங் போனால் பிரியாணி கிடைக்கும், ஐஸ்கிரீம் கிடைக்கும், வளையல் போட ஒரு ஆள், செருப்பு மாட்ட ஒரு ஆள், தலை சீவ ஒரு ஆள் இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அப்போ. அதை நான் ரொம்ப விரும்பினேன். குருசிஷ்யன் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். ரஜினி சாருக்கு கவுதமி தான் ஹீரோயின். எப்போ பார்த்தாலும் என்னை கிண்டல் பண்ணிட்டே இருப்பார் ரஜினி.
‘ஏன் எப்போ பார்த்தாலும் கவுதமியை முறைத்துக் கொண்டே இருக்க?’ என்று ரஜினி சார் கோர்த்து விடுவார். ‘சார் நான் எங்கே சார் முறைத்தேன்’ என்று கேப்பேன். அவர் அப்படி தான் கலாட்டா பண்ணிட்டே இருப்பார். அதுவரை குடும்பப்பாங்கான கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருந்தேன். குருசிஷ்யன் தான் என்னுடைய முதல் கிளாமர் படம். மார்டன் ஆடைகள் அணியவே ரொம்ப கஷ்டமாக இருந்தது. பாலசந்தர் சார் போன் செய்து, ‘என்ன சீதா பண்ணிட்டு இருக்க? ஏன் இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் பண்ணிட்டு இருக்க?’ என்று திட்டுறாரு. விசு சாரும் அதே வார்த்தையே சொல்லி திட்டுறாரு.
எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. என் அப்பாவிடம் போய், ‘அப்பா நான் வேண்டாம்னு சொன்னேன், நீ கேட்கல,’ என அழுதேன். அதன் பின் நான் மாடர்ன் ஆடைகள் அணிந்து நடிக்கவில்லலை. பார்த்திபன் புதுமுகமாக புதிய பாதை படத்தை இயக்க வந்த போது, நான் அதில் நடிக்க சம்மதிக்க காரணம் இருந்தது.
ஒருவன் கற்பழித்துவிடுகிறான், அவனோடு அந்த பெண் வாழ்கிறாள் என்பது தான் கதை. கற்பழித்தவனுடன் வாழ வேண்டும் என்கிற கதை புதிதாக இருந்தது. வித்தியாசமாக இருந்தது, நல்லா இருக்கும் என தோன்றியது. எனவே அதில் நடிக்கலாம் என முடிவு செய்தேன். ரசிகர்களும் அதற்கு பயங்கரமாக பாராட்டை தந்தனர். படமும் பயங்கர ஹிட். என்னோட கதாபாத்திரம் அதில் பேசப்பட்டது. அதன் பின் எனக்கு நிறைய படங்கள் வந்தது. ஆனால், காதல், கல்யாணம் என என்னால் அடுத்து நடிக்க முடியாமல் போனது’’
என்று அந்த பேட்டியில் சீதா கூறியுள்ளார்.
டாபிக்ஸ்