Samantha: விவாகரத்திற்கு அரசியல் காரணமா? - குண்டு போட்ட அமைச்சருக்கு நெத்தியடி பதில் கொடுத்த சமந்தா
Samantha: சினிமா பிரபலங்களின் வாழ்க்கையை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று நடிகை சமந்தா கேட்டுக் கொண்டார்.
நாக சைதன்யா - சமந்தா பிரிந்ததற்கு முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான் காரணம் என அமைச்சர் கொண்டா சுரேகா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கருத்தை ஹீரோ நாகார்ஜுனா ஏற்கனவே மறுத்துள்ளார். சினிமா பிரபலங்களின் வாழ்க்கையை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த சர்ச்சைக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.
அவர் வெளியீட்டு இருக்கும் பதிவில், " எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி ஊகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெண்ணாக இருப்பதற்கும், போராடுவதற்கும் நிறைய தைரியமும், வலிமையும் தேவை. இந்தப் பயணம் என்னை எப்படி மாற்றியது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். தயவு செய்து அதை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள், ஒரு அமைச்சராக உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
அரசியல் சதியும் இல்லை
இருவரின் தனியுரிமைக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும்படி உங்களை கேட்டு கொள்கிறேன். எனது விவாகரத்து என்பது எனது தனிப்பட்ட விஷயம். எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்துள்ளது. இதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து அரசியல் விவகாரத்தில் இருந்து எனது பெயரை தூரமாக வைக்க முடியுமா? ஏனென்றால் நான் எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கிறேன். அதை கடைசி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புகிறேன் ’’ என்றார்.
ஹீரோ நாக சைதன்யா பதில்
அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நாக சைதன்யாவும் பதிலளித்துள்ளார் . தனது தந்தை ட்விட்டரில் பதிவிட்ட பதிவை ரீட்வீட் செய்துள்ளார். “அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம். சக மனிதர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும்.
இதுவரை இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற மற்றும் முற்றிலும் அபத்தமான கிசுகிசுக்கள் வந்துள்ளன. எனது முந்தைய மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் மீதான ஆழ்ந்த மரியாதை காரணமாக நான் இதையெல்லாம் அமைதியாக இருந்தேன்.
பொறுப்புள்ள பெண் என்ற முறையில் உங்கள் கருத்துகளை சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள். உங்கள் கருத்துகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை மீடியா தலைப்புச் செய்திகளுக்காக சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது " என்றார்.
அமைச்சர் கோண்டா சுரேகாவின் சர்ச்சை கருத்து
நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிந்ததற்கு கேடிஆர் தான் காரணம் என அமைச்சர் கொண்டா சுரேகா குற்றம் சாட்டினார். புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல ஹீரோயின்கள் திருமணம் செய்து கொண்டு பிரிந்து செல்வதற்கு கேடிஆர் தான் காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
“ கே.டி.ஆர் அமைச்சராக இருந்த போது பல ஹீரோயின்களின் வாழ்க்கையோடு விளையாடி போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து பிரச்னையை ஏற்படுத்தியவர். நாக சைதன்யா-சமந்தா பிரிந்ததற்கு கே.டி.ஆர் தான் காரணம்.பல ஹீரோயின்கள் திரையுலகத்தை விட்டு வெளியேறவும் கேடிஆர் தான் காரணம். இது எல்லாருக்கும் தெரியும் " என்றார் கொண்டா சுரேகா.
டாபிக்ஸ்