Radikaa Sarathkumar: திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார் - காரணம் என்ன?
Actress Radikaa Sarathkumar: திமுக நிர்வாகியான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ராதிகா சரத்குமார் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சு
திமுக பேச்சாளாரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பொது மேடையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், பாஜகவை சேர்ந்த குஷ்பூ பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரக்குறைவாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி விடுதலை செய்யப்பட்டார். திமுகவில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார்.