Priya Bhavani Shankar: கிசு கிசு முடிந்தது.. 10 வருட காதலருடன் திருமணத்தை உறுதி செய்த ப்ரியா பவானி சங்கர்-actress priya bhavani shankar gave clarity on marriage with 10 years lover - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Priya Bhavani Shankar: கிசு கிசு முடிந்தது.. 10 வருட காதலருடன் திருமணத்தை உறுதி செய்த ப்ரியா பவானி சங்கர்

Priya Bhavani Shankar: கிசு கிசு முடிந்தது.. 10 வருட காதலருடன் திருமணத்தை உறுதி செய்த ப்ரியா பவானி சங்கர்

Aarthi Balaji HT Tamil
Aug 08, 2024 12:00 PM IST

Priya Bhavani Shankar: சினிமா துறையில் நுழைவதற்கு முன்பே நான் ராஜவேல் என்பவரை காதலித்து வந்தேன். கல்லூரியில் இருந்து அந்த பயணம் தொடங்கியது என்றார் பிரியா பவானி சங்கர்.

கிசு கிசு முடிந்தது.. 10 வருட காதலருடன் திருமணத்தை உறுதி செய்த ப்ரியா பவானி சங்கர்
கிசு கிசு முடிந்தது.. 10 வருட காதலருடன் திருமணத்தை உறுதி செய்த ப்ரியா பவானி சங்கர் (Priya BhavaniShankar Twitter)

இவர் கடைசியாக இந்தியன் 2வில் நடித்து இருந்தார். அதில் அவர் நடித்த காரணத்தினால் தான் படம் தோல்வி அடைந்தது என்று சிலர் கூறினார்கள். 

மிகப்பெரிய பட்ஜெட் படம்

அதற்கு அவர் சமீபத்தில் பதில் கூறுகையில், “ என் கேரியரில் நான் ஒப்பந்தம் செய்த மிகப்பெரிய பட்ஜெட் படம் இந்தியன் 2. படம் ஒப்புக்கொள்ளப்பட்ட உடனேயே எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. பெரிய படங்களில் நடித்தால் தான் ஹீரோயினாக உணர்கிறேன். படம் தோல்வியடையும் என்று முன்கூட்டியே தெரிந்தால் ஏன் யாரும் படம் எடுக்க வேண்டும். படத்தின் டெக்னீஷியன் முதல் அனைவரும் படத்தை ஹிட் செய்ய கடுமையாக உழைக்கிறார்கள்.

கடும் மன வேதனை

எல்லோரும் கஷ்டப்பட்டு உழைக்கும் போது அது பலன் கொடுக்கவில்லை என்றால் மிகவும் வேதனையாக இருக்கும். இந்தியன் 2 படம் ஹிட் ஆகாது என்று தெரிந்தாலும் அந்த படத்தை என்னால் கைவிட முடியாது. இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு நான் தான் காரணம் என கருத்துகள் கூறப்படுவது வேதனை அளிக்கிறது. ஒரு படம் தோல்வியடைய பல காரணங்கள் இருக்கிறது “ என்றார்.

திருமணம் எப்போது

தொடர்ந்து ப்ரியா பவானி ஷங்கரிடம் அவரின் திருமணம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” சினிமா துறையில் நுழைவதற்கு முன்பே நான் ராஜவேல் என்பவரை காதலித்து வந்தேன். கல்லூரியில் இருந்து அந்த பயணம் தொடங்கியது. 

வதந்திக்கு பதில்

ஆனால் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக ஏற்கனவே பல வதந்திகள் வந்தன. நாங்கள் அவர்களை அதிகம் கவனிக்கவில்லை. இதுவரை பல நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். அவர்களின்  நட்பின் காரணமாக அவர்களின் பிறந்தநாளிலோ அல்லது ஏதேனும் விசேஷமான சந்தர்ப்பத்திலோ சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பதிவிடுவது வழக்கம். 

10 வருட உறவு

அதான்.. அப்படி போஸ்ட் போடுறதுதான் தாமதம்.. ஹீரோக்களுடன் உறவாடுவது வழக்கம். அதிர்ஷ்டவசமாக என்னுடன் நடித்த ஹீரோக்கள் அனைவருமே தற்போது திருமணம் செய்து கொண்டவர்கள். 

நான் பத்து வருடங்களாக ராஜவேலுடன் உறவில் இருக்கிறேன் . மேலும், நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம். நேரம் கிடைக்கவில்லை. அடுத்த வருடம் கண்டிப்பாக செய்வோம் “ என்றார். இந்த செய்தி ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்களிடையே மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியன் 2

இந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திரைப்படம் இந்தியன் 2.

இந்தியன் 2, ஷங்கரின் கேரியரில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று கருதப்பட்டது, ஆனால் அது வித்தியாசமாக மாறியது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.