18+ நிகழ்ச்சியைப் பார்க்க ஆசைப்பட்டு சம்பவம் செய்த நடிகை! இப்போ வெட்கப்பட்டு என்ன பண்ண?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  18+ நிகழ்ச்சியைப் பார்க்க ஆசைப்பட்டு சம்பவம் செய்த நடிகை! இப்போ வெட்கப்பட்டு என்ன பண்ண?

18+ நிகழ்ச்சியைப் பார்க்க ஆசைப்பட்டு சம்பவம் செய்த நடிகை! இப்போ வெட்கப்பட்டு என்ன பண்ண?

Malavica Natarajan HT Tamil
Nov 10, 2024 10:09 AM IST

18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக செயற்கையாக மார்பகங்களை உருவாக்கி சென்றதாக நடிகை பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

18+ நிகழ்ச்சியைப் பார்க்க ஆசைப்பட்டு சம்பவம் செய்த நடிகை! இப்போ வெட்கப்பட்டு என்ன பண்ண?
18+ நிகழ்ச்சியைப் பார்க்க ஆசைப்பட்டு சம்பவம் செய்த நடிகை! இப்போ வெட்கப்பட்டு என்ன பண்ண?

நான் மிகவும் குறும்புக்காரி

இந்நிலையில், ப்ரீத்தி ஜிந்தா ரெண்டெஸ்வஸ் வித் சிமி கரோவல் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று தன் சிறு வயது குறித்து பல சுவாரசியமான தகவல்களைக் கூறினார்.

அப்போது பேசிய ப்ரீத்தி ஜிந்தா, சிறு வயதில் நான் மிகவும் குறும்புக்கார பெண்ணாக இருந்தேன். இதனால் என் அம்மாவை மிகவும் நான் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். அவருக்கு நான் பல சங்கடங்களையும் தந்திருக்கிறேன் என்றார்.

நான் சுமார் 12 வயதில் இருக்கும் போது ஒரு ராணுவ நிகழ்ச்சி நடைபெற்றது. நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என மிகவும் அடம்பிடித்தேன். ஆனால், அந்த நிகழ்ச்சியில் 18 வயதுக்கு மேலானவர்கள் தான் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆரஞ்சு பழத்தை வைத்து 18 வயது பெண்ணாக மாறினேன்

இருந்தாலும், அந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதைக் காண இருந்த ஆர்வத்தால் நான் அந்த வயதில் மிகவும் மோசமான ஒரு சம்பவத்தை செய்தேன். நான் என் அம்மாவின் ப்ராவை எடுத்துப் போட்டுக் கொண்டு வந்துவிட்டேன். பின், இரண்டு ஆரஞ்சு பழங்களை அதற்குள் வைத்துக் கொண்டு, நானே என்னை 18 வயது பெண் போல மேக்கப் செய்து கொண்டேன்.

பின், ராணுவ நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்று, எனக்கு இப்போது 18 வயது ஆகிறது. நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா? எனக் கேட்டேன். அந்த சமயத்தில் அங்கிருந்த நபர் என்னை மேலேயும் கீழேயும் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

மிகவும் வெட்கமாக இருக்கிறது

இதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது, மிகவும் வெட்கமாக இருக்கிறது. இதுகுறித்து என் அம்மாவிற்கு தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தால் அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்றே தெரியாது. இப்போது உள்ள எனது நண்பர்களின் குழந்தைகளை நான் அதிக குறும்புத் தனங்களுடன் பார்க்கிறேன். நல்ல வேளை கடவுள் எனக்கு அதுபோன்ற குழந்தையை கொடுக்கவில்லை என்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன் எனக் கூறினார்.

தந்தை மரணம்

ப்ரீத்தி ஜிந்தாவின் தந்தையும் ஒரு ராணுவ வீரர் என்பதால் அவருக்கு அந்த ஆசை வந்ததாம். ஆனால், அவர் 13 வயதில் இருக்கும் போதே அவரது தந்தை விபத்து ஒன்றில் சிக்கி இறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

ரீ ரிலிஸ் ஆகும் வீர்- ஜாரா

ஷாருக் கான் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடித்துள்ள வீர்-ஜாரா திரைப்படம் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியானது. இந்நிலையில், அந்தப் படம் அதன் 20 வது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. இதனை முன்னிட்டு அந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் சர்வதேச அளவில் 600 திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.