Happy birthday Nirosha: தமிழ் சினிமாவின் நவரச நாயகி நிரோஷா: ஏன் தெரியுமா?
நடிகை நிரோஷா ராம்கி இன்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அக்னி நட்சத்திரம். இப்படத்தில் நடித்த பல கதாபாத்திரங்களுக்கு இதுவே மைல்கல்லாக அமைந்தது. வெற்றியின் உச்சத்தைத் தொட்ட இந்த திரைப்படத்தில் மாடல் பெண்ணாக அறிமுகமானவர்தான் நடிகை நிரோஷா.
அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இலங்கையில் பிறந்த இவர் பழம்பெரும் நடிகர் எம்.ஆர் ராதாவின் மகள். நடிகை ராதிகா சரத்குமார் அவர்களின் தங்கை ஆவார். தனது இரண்டாவது படமான செந்தூரப்பூவே அப்படியே கிராமத்துப் பெண்ணாக மாறி தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்த படத்தில் நடிகர் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த ஜோடி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அந்த வரவேற்பு நிஜ வாழ்க்கையிலும் உண்மையானது. நடிகர் ராம்கி திருமணம் செய்து கொண்டார் நிரோஷா.
பல படங்களில் கதாநாயகியாகச் சொல்லித்தந்த நிரோஷா. இறந்த கைகள் என்ற திரைப்படத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் தனது உச்சக்கட்ட நடிப்பை இறுதிக் கட்டத்தில் வெளிப்படுத்தி இருப்பார். இதைப் பார்த்த ரசிகர்கள் கண் கலங்காமல் இருக்கவே முடியாது. அந்த அளவிற்குத் தனது நடிப்பைச் சீராக மக்களிடம் கொண்டு சேர்த்து இருப்பார்.
வெள்ளித்திரை மற்றும் சின்னதிரை என அனைத்திலும் வளமும் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது திரையில் தோன்றி வருகிறார். சின்னத்திரையில் இவர் நடித்து வெளியான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடர் 90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத சீரியல் ஆகும்.
திரைத் துறையில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் இந்த ஜோடியும் ஒன்று. 80ஸ் ரசிகர்கள் மத்தியில் பிரிக்க முடியாத கதாநாயகிகளில் இவரும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது. நவரச நாயகன் கார்த்திக் போல் இவரும் ஒரு நவரச நாயகிதான். இவர் இன்று தனது 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நவரச நாயகிக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளலாம்.
டாபிக்ஸ்