Minnal Deepa: ‘என் கணவரையே மாத்திட்டாங்க’ மின்னல் தீபாவின் ‘ஷாக்’ அனுபவம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Minnal Deepa: ‘என் கணவரையே மாத்திட்டாங்க’ மின்னல் தீபாவின் ‘ஷாக்’ அனுபவம்!

Minnal Deepa: ‘என் கணவரையே மாத்திட்டாங்க’ மின்னல் தீபாவின் ‘ஷாக்’ அனுபவம்!

HT Tamil Desk HT Tamil
Feb 03, 2023 06:04 AM IST

‘முருகன், இவர் தான் நம்ம கணவர் என்று நினைத்துக் கொண்டு, உண்மையாவே நமது கணவர் இப்படி இருந்தால் நம் மனநிலை எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டு, அதற்குள் போய்விட்டால், எதார்த்தமான நடிப்பு வந்துவிடும்’ -மின்னல் தீபா!

நடிகை மின்னல் தீபா
நடிகை மின்னல் தீபா

‘‘தீபா என்றால் என்னை தெரியாது. அதுவும் இல்லாமல், தீபா என்கிற பெயரில் பலர் இருப்பதால், என்னை அடையாளம் கண்டு கொள்ள சிரமம் இருந்தது. அதுவே, மின்னல் தீபா என்றதும், பலருக்கும் அடையாளம் தெரிந்தது. இப்போது அதெல்லாம் போய், சுந்தரி சீரியலில் வரும் லட்சுமி என்கிற பெயரை தான் இப்போது அழைக்கிறார்கள். 

சமீபத்தில் என் ஊருக்கு சென்றிருந்தேன். என்னைப் பார்த்தவர்கள், ‘ஏய், உங்க கணவர் முருகன் மாமா எங்கே’ என்று என்னிடம் கேட்டார்கள். அருகில் என் கணவரும் இருந்தார். ‘அடப்பாவிகளா… இவர் தான் என் புருசன்’ என அவர்களிடம் கூறினேன். கொஞ்ச நேரத்தில் என் புருசனை மாத்திட்டாங்க. 

சீன், டயலாக்கை எப்போதும் உள்வாங்க வேண்டும். வேறும் சீனாக ஷ்பாட்டில் நடிக்க கூடாது. முருகன், இவர் தான் நம்ம கணவர்  என்று நினைத்துக் கொண்டு, உண்மையாவே நமது கணவர் இப்படி இருந்தால் நம் மனநிலை எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டு, அதற்குள் போய்விட்டால், எதார்த்தமான நடிப்பு வந்துவிடும். 

படப்பிடிப்புக்கு வந்து விட்டால், முருகன் தான் என் கணவர். என் குடும்பத்தை பற்றி சொல்ல வேண்டுமானால், என் அம்மா இறந்து 5 மாதம் ஆகிறது. நான், என் கணவர், 4 நாய்கள், இது தான் என் குடும்பம். இது தான் என்னோட உலகமே. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆதரவை தொடர்ந்து சீரியல் ரசிகர்கள் தர வேண்டும். உங்களுக்கு பிடித்த மாதிரியான நடிகராக நாங்கள் இருக்கும் போது, எங்களுக்கு உதவி பண்ணுங்க. நாங்க உங்களை சந்தோசப்படுத்துவோம். எல்லா கஷ்டத்தை மறந்து, உங்கள் வீட்டிக்கு வரும் போது உங்களை திருப்தி படுத்தனும், அவ்வளவு தான்,’’

என்று அந்த பேட்டியில் மின்னல் தீபா கூறியிருந்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.