Madhoo: ரொம்ப வலித்தது.. பிரபு தேவா தான் காரணம்.. மிஸ்டர் ரோமியோ மது சொன்ன ரகசியம்
மிஸ்டர் ரோமியோ படம் தொடர்பாக மது முன்பு பேட்டி அளித்த விடியோ வைரலாகிறது.
ரோஜா படம் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மது. ரோஜாவாக வந்த மது 90களில் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். , திருமணத்துக்குப் பிறகு சிறிய இடைவெளி எடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
மிஸ்டர் ரோமியோ படம் தொடர்பாக அவர் முன்பு அளித்த பேட்டியில், “மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபு தேவாவுடன் தண்ணீர் காதலுக்கு பாடலில் நடித்தேன். அந்த காட்சியில் பிரபு தேவாவின் ஈகோவை மனதில் வைத்து நடித்தேன்.
அப்போது இந்திய சினிமாவில் டாப் டான்ஸராக இருந்தவர் பிரபு தேவா. நான் ஒரு சின்ன நடிகை தான். அந்த பாடலை படமாக்கும் முன் எனக்கு நடனம் கற்பிக்க உதவியாளரை விட்டுவிட்டு என் அறையை விட்டு வெளியேறினார். அது என்னை மிகவும் காயப்படுத்தியது. அவர் செய்த செயல் ரொம்ப வலித்தது.
நான் சின்ன பெண்ணாக இருந்ததால் உதவியாளரிடம் சொல்லிக் கொடுக்கச் சொல்லி விட்டுச் சென்றாரோ என்று யோசித்தேன். பெரிய நடிகன் என்ற பெருமயால் அவர் இப்படி செய்து இருக்கிறார் போல என்று மனதில் நினைத்துக் கொண்டேன். இரண்டரை மணி நேரம் கழித்து அவர் வருவதற்குள், நான் அனைத்து ஸ்டெப்களையும் கற்றுக் கொண்டு மேக்கப்புடன் தயாராகிவிட்டேன்.
அவருடன் ஈகோ ஏற்படுத்தியது. அந்த கோபத்தில் அந்த பாடலில் நடித்தேன். ஆனால் பாடல் ஹிட் ஆகி நிறைய பாராட்டுக்களைப் பெற்றேன். இப்போது அந்தப் பாடலைப் பார்க்கும்போது அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது' என்றார்.
மேலும், “ ஹீரோக்களுக்கு கேரியர் பிரேக் கிடைப்பதில்லை. அவர்கள் அதைப் பற்றி சிந்திப்பதும் இல்லை. ஆனால் கதாநாயகிகளுக்கு திருமணத்துக்குப் பிறகு பொறுப்புகள் காரணமாகவோ அல்லது உடல்நிலை காரணமாகவோ இடைவெளி அவசியம். ஆனால் இன்றைக்கு ஒரு நடிகை மீண்டும் நடிக்க முடியாது என்று நினைத்தால் தான் அது பிரச்னை. எனக்கு வயதாகிவிட்டதால், அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க முடியாது என்று ஒருமுறை நினைத்துக் கொண்டால், என்னால் முன்னேற முடியாது. அதை உடைத்து வெளியே வர வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்