Silk Smitha: சிலுக்கு உடம்ப பாத்ரூம் ஜன்னலை உடைச்சு பார்த்தாங்க…அந்த இடத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்யலாம்' -கஸ்தூரி!
Silk Smitha: பாத்ரூமில் ஜன்னலை உடைத்து பொது மக்கள் அவரது அந்தரங்கத்தை பார்த்தார்கள்.இதை சிலுக்குவே சொல்லி மிகவும் வருத்தப்பட்டார் - கஸ்தூரி!
Silk Smitha: நடிகை கஸ்தூரி சில்க் ஸ்மிதாவிற்கு நடந்த கொடுமை குறித்து மின்னம்பலம் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்
அதில் அவர் பேசும் போது, “ஏதோ ஒரு படத்திற்காக வெளி இடத்தில் நடந்த படப்பிடிப்பிற்கு சென்றிருந்தார் சில்க் ஸ்மிதா. அப்போது சிலுக்கு என்றால் மக்களுக்கு ஒரு விதமான கவர்ச்சி இருந்தது. வெளி இடம் என்பதால், அங்கு அவருக்கு பாத்ரூம் செல்வதற்கு அவர் தங்கி இருந்த வீட்டிற்கு வெளியே பாத்ரூம் அமைக்கப்பட்டு இருந்தது.
அன்றைய நாளும் வழக்கம் போல அவர் பாத்ரூம் சென்ற போது, அங்கிருந்த மக்கள் ஜன்னலை உடைத்து அவரது அந்தரங்த்தை பார்க்க முயன்றனர். இதை சிலுக்கே ஒரு இடத்தில் சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். ஆக, பாலியல் துன்புறுத்தல் என்பது சினிமாவில் இருந்து மட்டும் தான் வருகிறது என்று கூற முடியாது பொது மக்களிடம் இருந்தும் கூட, எங்களுக்கு அவ்வப்போது வரும். அங்கு சிலுக்கை அப்படி அணுகியது பொது மக்கள் தான். ஆனால் அவருடன் இருந்த சினிமா கலைஞர்கள் அவரை ஒரு தங்கை போல தான் நடத்தி, அந்த செட்டிற்கு கொண்டு வந்தார்கள்.
சினிமா துறையில் பாலியல்
சிலுக்கு ஒரு படத்தில் நடித்தால் பொது மக்கள் எப்படி பேசுவார்கள் தெரியுமா? இந்தப்படத்தில் சிலுக்கா நடிக்கிறார்… அந்தப்படத்தில் ஹீரோ யார்… அப்படியென்றால் இன்று இரவு அவர்களுக்கு ஜாலிதான் என்பார்கள். அப்படியானால் சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல்களே இல்லையா என்றால், கண்டிப்பாக இருக்கிறது.
சில சமயங்களில் எங்களுக்கு அவசரத்திற்கு செல்வதற்கு கூட, பாத்ரூம் வசதி இல்லாமல் இருந்திருக்கிறது. ஏதோ வெளியிடத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். எங்கோ ஒரு மழை உச்சியில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள் என்றால் பரவாயில்லை; நாம் அந்த இடத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளலாம்.
லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பானது
முன்னதாக பேட்டி அளித்த கஸ்தூரி, “ மீ டூ மூவ்மெண்டிலேயே இது போன்ற விஷயங்கள் வெளியே வந்து விட்டன. இதனை, ஹேமா கமிட்டி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் விசாரணை செய்து, ஆமாம், அது உண்மைதான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் லஞ்சம் வாங்குவதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்களுடன் படுக்கையை பகிர்வது
ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் தங்களை கூப்பிடும் ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பானது. ஆனால், வலுக்கட்டாயமாக இணங்கச்செய்வது கொள்ளை அடிப்பதற்கு சமமாகும்.
இன்னொரு விஷயம் இதுபோன்ற விஷயங்களை வெளியே சொல்பவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. சின்மயிக்கு நடந்ததை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அவர்களுக்கு சுத்தமாக பிழைப்பே இல்லாமல் போய்விட்டது. சினிமா என்பது அதிக உழைப்பை கோரக்கூடிய வேலை. “ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்