Jyothi Lakshmi: அப்பவே கவர்ச்சியில் உச்சம்.. தமிழ் சினிமாவை கட்டி போட்ட ஜோதிலட்சுமி.. எம்ஜிஆர் வழி
Jyothi Lakshmi: நடிகை ஜோதிலட்சுமி 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சினிமாவிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்க ஜோதிலட்சுமி என்றுமே அவர்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா நினைவுகளோடு இருப்பார்.
Jyothi Lakshmi: சினிமாவைப் பொறுத்தவரைக் கவர்ச்சியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய எத்தனையோ நடிகைகள் இடம் தெரியாமல் காணாமல் விட்டனர். ஆனால் தொடக்கத்திலிருந்து இறுதிவரை தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகை ஜோதிலட்சுமி.
எம்ஜிஆரின் நடிப்பில் வெளியான பெரிய இடத்துப் பெண் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனது நடனத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி.
எம்ஜிஆர் திரைப்படங்களில் தொடர்ந்து இவருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கினார். தெலுங்கு திரைப்படங்களில் இவரது தங்கை ஜெயமாலினி மிகப்பெரிய கவர்ச்சி நடனக் கலைஞராகத் திகழ்ந்து வந்தார்.
இருவரும் சேர்ந்து சினிமாவில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடலாகக் கட்டோடு குழலாட இந்த பாடலின் மூலம் அறிமுகமான இவர். அடிமைப்பெண் திரைப்படத்தில் காலத்தை வென்றவன் என்ற பாடல் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
எம்ஜிஆர் திரைப்படங்களில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானாலும் தன்னை கவர்ச்சி நடிகையாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கொண்டார். தனது தொழிலைத் தெய்வமாக மதித்து ஜோதிலட்சுமி மற்றும் ஜெயமாலினி இருவரும் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள் எனப் பல நடிகர்கள் இவர்களைப் பாராட்டியுள்ளனர்.
கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடும் ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா போல அனைத்து பெண்களுக்கும் பிடித்த நடிகையாக வலம் வந்தார். 70 மற்றும் 80களில் உச்சத்திலிருந்த ஜோதிலட்சுமி அதற்குப் பிறகு சில காலம் தமிழில் காணாமல் போனார்.
சில ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்த ஜோதிலட்சுமி, சேது திரைப்படத்தில் கானக் கருங்குயிலே இந்த பாடலின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். பழம்பெரும் நடிகையான டி.ஆர்.ராஜகுமாரியின் உறவினர் ஜோதிலட்சுமி. நடிகை ஜோதி மீனா ஜோதிலட்சுமியின் மகள் ஆவார்.
இப்படி தமிழ் சினிமாவில் பயணம் செய்து கொண்டிருந்த இவர், வள்ளி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடித்தார். தொடக்க காலத்தில் எப்படி இருந்தாரோ கடைசி வரை அப்படியே சுறுசுறுப்பாகப் பொலிவு மாறாமல் அழகாய் காட்சியளித்தது இவரின் மிகப்பெரிய வெற்றியாகும்.
தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய காலம் முதல் அவர் காலம் முடிவுவரை பொழிவு குறையாமல் அழகாக சினிமா பயணத்தை தொடங்கினார் நடிகை ஜோதிலட்சுமி. தற்போது இருப்பவர்களுக்கு கூட இவர் பெயரைச் சொன்னால் தெரியும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார். இதுவே இவர்களில் கலை பயணத்திற்கு மிகப்பெரிய பாராட்டு ஆகும்.
இறுதிவரை கவர்ச்சி குறையாமல் சினிமாவில் நடித்து வந்தார். இதுவே அவர் தனது தொழிலைத் தெய்வமாக நினைத்து வந்தார் என்பதற்கு மிகப்பெரிய சான்றாகும். இன்று ஜோதிலட்சுமியின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சினிமாவிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்க ஜோதிலட்சுமி என்றுமே அவர்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா நினைவுகளோடு இருப்பார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்