HBD Jayanthi: முகபாவணையில் ரசிகர்களை ஆட்டிப்படைத்தவர் ஜெயந்தி-actress jayanthi 79th birthday is celebrated today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Jayanthi: முகபாவணையில் ரசிகர்களை ஆட்டிப்படைத்தவர் ஜெயந்தி

HBD Jayanthi: முகபாவணையில் ரசிகர்களை ஆட்டிப்படைத்தவர் ஜெயந்தி

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 06, 2024 06:30 AM IST

நடிகை ஜெயந்தியின் 79வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

நடிகை ஜெயந்தி
நடிகை ஜெயந்தி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகப் பெரிய நாயகிகளாக ஜொலித்தவர்கள் அனைவரும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கர்நாடகாவைச் சேர்ந்த எத்தனையோ நாயகிகள் தமிழ் சினிமாவில் ஜொலித்துள்ளனர். மிகப்பெரிய நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் சரோஜாதேவி அதற்கு பிறகு கன்னடத்தில் இருந்து மிகப்பெரிய நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ஜெயந்தி.

வெள்ளாரி பகுதியில் ஆங்கில பேராசிரியராக இருந்தவர் பாலசுப்ரமணியனுக்கு மகளாக பிறந்தவர் ஜெயந்தி. இவருடைய இயற்பெயர் கமலா குமாரி சினிமாவிற்கு வந்த பிறகு இவருக்கு ஜெயந்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பாலச்சந்தர் பட்டறையில் இருக்கக்கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த என்.டி.ராமராவை ஒருமுறை சிறுவயதில் ஜெயந்தி சந்திக்க சென்றுள்ளார் அப்பொழுது கேள்வியாக என்னோடு நீ நாயகியாக நடிக்கிறாயா என்று கேட்டுள்ளார். அதற்குப் பிறகு அவர் வார்த்தையை உண்மையாகிவிட்டது பல படங்களில் அவரோடு நடித்து வெற்றிகளை கொடுத்துள்ளார் ஜெயந்தி.

தமிழ், தெலுங்கு, கன்னடா என மூன்று மொழிகளிலும் மிகப்பெரிய நாயகியாக வலம் வந்துள்ளார். கன்னட சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்த ராஜ்குமாருடன் சேர்ந்து இவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அனைத்து விதமான களத்திலும் இறங்கி தனது திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை ஜெயந்தி. குடும்பத் திரைப்படங்கள் தொடங்கி கவர்ச்சி நடனம் வரை அனைத்திலும் தனது அசாத்திய திறமையை காட்டி மிகப்பெரிய பாராட்டுக்கள் எல்லாம் பெற்றுள்ளார்.

மிஸ் லீலாவதி என்ற கன்னட திரைப்படத்தில் இரவு நேர உடைகளை அணிந்து நடித்திருந்தார் வித்தியாசமான நவீன காலணிகளை அணிந்து மிகப்பெரிய டிரெண்டாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். அந்த காலகட்டத்தில் அது மிகவும் பேசும் பொருளாக இருந்தது.

இயக்குனர் பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் ஜொலிக்க கூடிய எத்தனையோ நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அந்த வகையில் இவருடைய முதன்மை நாயகி ஜெயந்தி திகழ்ந்து வந்தார். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய எத்தனையோ வெற்றி திரைப்படங்களில் இவர் முதன்மை நாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த அவர் காலகட்டத்தில் இருந்த அத்தனை நடிகர்களோடும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக முத்துராமன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் ஆகியோருடன் அதிகமாக நடித்துள்ளார்.

முக பாவனைகள் பேசக்கூடிய ஒரு சில நடிகைகளில் இவர் முக்கியமான இடத்தைப் பெற்றவர். இவருடைய 79 ஆவது பிறந்தநாள் என்று கொண்டாடப்படுகிறது நல்ல கலைஞர்களுக்கு என்றும் அழிவில்லை என்பதற்கு இவர் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.