Hansika: கியூட் நாயகி.. அனைவருக்கும் பிடித்த குழந்தை ஹீரோயின் ஹன்சிகா.. குட்டி குஷ்பூ பிறந்தநாள்
Hansika: ஹன்சிகா நிறைவான குடும்ப வாழ்க்கையோடு, சினிமா பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். ஹன்சிகா மோத்வானி தற்போது தனது 33 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் ஹன்சிகா. இந்த ஏஞ்சலுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

HBD Hansika: இந்தியாவில் தமிழ் சினிமாவுக்கு தனித்துவமான இடம் எப்போதும் உண்டு. மிகப்பெரிய துறையாக விளங்கி வரும் சினிமா துறையில் நடிகர்கள் உச்சத்தில் அமர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. நடிகர்கள் உச்சத்தில் வந்தாலும் குறிப்பிட்ட ஒரு சில காலம் மட்டும் பயணம் செய்யும் நடிகைகளின் வாழ்க்கை அவ்வளவு எளிதான பயணம் கிடையாது.
எத்தனையோ நடிகைகள் பலம் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை ஒரு சில நடிகைகள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்று வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு மத்தியில் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
குழந்தை நட்சத்திரம்
குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார் ஹன்சிகா. தமிழ் சினிமாவின் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்படும் நடிகை தான் ஹன்சிகா. மிகவும் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர்.