Actress Bhanupriya: நடிகை பானுப்ரியாவுக்கு இப்படி ஒரு நிலையா!
தனக்கு நினைவாற்றல் இழப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை பானுப்ரியா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகர்களுமே உச்சத்திற்கு வருவதில்லை. உச்சத்திலிருந்த பல நடிகைகளின் 80, 90களில் தென்னிந்திய மொழி படங்களில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா.
பரதநாட்டிய கலைஞரான இவர், கதாநாயகியாக மட்டுமல்லாமல் தன்னுடைய சமகாலத்தில் நாயகியாக நடித்த பலருக்கும் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். தனியாக நடக்கப் பள்ளி நடத்தி வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார்.
அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் பானுப்ரியா. சமீபத்தில் ஊடகத்தில் பேட்டி அளித்த பானுப்ரியா தனக்குக் கடந்த சில ஆண்டுகளாக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பேட்டியில் அவர்," என்னுடைய நினைவாற்றல் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடனத்திற்காக நான் செய்யும் பயிற்சியைக் கூட தற்போது நிறுத்தி விட்டேன். ஓராண்டுக்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிப்பதாக ஒப்பந்தம் போடுகிறேன்.
சில நேரங்கள் சில மனிதர்கள் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குநர் ஆக்சன் என்று சொன்ன பிறகும் வசனம் எனது ஞாபகத்திற்கு வரவில்லை அப்படியே நிலை தடுமாறி நின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்