HBD Ambika: எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் நாயகி.. கேமராவை பிரியாத அம்பிகா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Ambika: எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் நாயகி.. கேமராவை பிரியாத அம்பிகா

HBD Ambika: எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் நாயகி.. கேமராவை பிரியாத அம்பிகா

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 16, 2023 05:00 AM IST

நடிகை அம்பிகா தனது 61வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

அம்பிகா பிறந்தநாள்
அம்பிகா பிறந்தநாள்

கதாநாயகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு என தனி மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது, இருக்கின்றது. நாயகர்கள் எந்த அளவிற்கு கொண்டாடப்பட்டார்களோ அதே அளவிற்கு கதாநாயகிகளும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டனர்.

அந்த வகையில் 80களில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்ட நாயகிகளில் ஒருவர்தான் நடிகை அம்பிகா. இவருடைய தங்கையும் மிகப்பெரிய நடிகையாக அந்த காலகட்டத்திலேயே வலம் வந்தவர் அவர்தான் நடிகை ராதா. நடிகை அம்பிகா நடித்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.

80களில் கொடி கட்டி பறந்து ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவருடன் பல திரைப்படங்களில் நடிகை அம்பிகா நடித்துள்ளார். சமகாலத்தில் அவருடைய தங்கை ராதாவும் இவருக்கு போட்டியாக நடித்து வந்தார். 1979 ஆம் ஆண்டு வெளியான மாமாங்கம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அம்பிகா அறிமுகமானார்.

1988 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அம்பிகா வைத்திருந்தார். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை முழுமை அடைய செய்வது தான் இவருடைய வெற்றிக்கு காரணமாகும்.

பலர் ஏற்று நடிக்க தயங்கக்கூடிய பல்வேறு கதாபாத்திரங்களில் தயங்காமல் அம்பிகா நடித்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் படிக்காதவன் இந்த திரைப்படத்தில் சாராயம் காய்ச்சி விற்கக் கூடிய ஒரு இளம் பெண்ணாக இவர் நடித்திருப்பார்.

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பலரும் அச்சப்படுவார்கள். அந்த கதாபாத்திரத்தை சரியான முறையில் தைரியமாக ஏற்று நடித்து மற்ற நடிகைகளுக்கு ஒரு உதாரணமாக அம்பிகா மாறினார். பாக்யராஜ் இயக்கத்தில் உருவான அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் இவருடைய நகைச்சுவையான நடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதே திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் கதறி அழும் காட்சி அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தது. அந்த அளவிற்கு தனது தனித்திறமையை வெளிப்படுத்தி இருப்பார் அம்பிகா. மலையாளம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இவர் நடித்துள்ளார்.

அவன் இவன் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு தாயாக இவர் நடித்த கதாபாத்திரம் அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவர் தொடங்கிய காலத்திற்கும் தற்போது இருக்கும் தமிழ் சினிமாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொண்டு நடிப்பதில் இவர் வல்லவர். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இன்று வரை பெரிய திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

நடிகை அம்பிகா இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிப்புக்காக இவர் திரையில் கால் வைத்த காலத்திலிருந்து இன்றுவரை கேமராவின் முன் தனது முகத்தை மக்கள் மத்தியில் காட்டிக் கொண்டே இருக்கிறார். எத்தனை பிறந்தநாள் இவர் கண்டாலும் கேமராவை விட்டு பிரியாத ஆகச் சிறந்த கலைஞர்களில் இருவரும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.