நடிகர் டூ பாடலாசிரியர்...
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகர் டூ பாடலாசிரியர்...

நடிகர் டூ பாடலாசிரியர்...

Aarth V HT Tamil
Feb 21, 2022 10:57 PM IST

வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் நடிகர்கள் பலரும் பாடல்கள் எழுத ஆரம்பித்துவிட்டனர். அவ்வாறு சில பாடல் எழுதிய நடிகர்களின் பட்டியலை காண்போம்.

<p>சிவகார்த்திகேயன், தனுஷ்</p>
<p>சிவகார்த்திகேயன், தனுஷ்</p>

கமல் ஹாசன்

திரை வாழ்க்கையிலும் புதுமையான விஷயங்களையும், புதிய தொழில்நுட்பங்களும் ஆரம்ப கட்டம் முதல் தற்போது வரை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் பன்முகத் திறமைக் கொண்ட நடிகர்களில் மிக முக்கியமானவர் கமல் ஹாசன். 

‘நீ பார்த்தா’, ‘ஒன்ன விட’, ‘நீல வானம்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை அள்ளிக் கொடுத்தவர்.  இவர் கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

சின்னத்திரை மூலம் தனது வெள்ளித்திரை பயணத்தைத் தொடங்கியவர் சிவகார்த்திகேயன். நடிகராக வேண்டும் என்ற கனவோடு பல்வேறு சிரமங்களைத் தாண்டி வெள்ளித்திரைக்குள் நுழைந்த சிவகார்த்திகேயனை, தமிழ் சினிமா கை விடவில்லை. வந்த வேகத்தில் தனது பன்முகத் திறமையால் கோலிவுட்டில் கொடிகட்டி பறக்கிறார். 

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் இவரின் நடிப்பை ரசித்து வருகின்றனர். நடிகராக மட்டும் இருந்த இவருக்கு பாடல் எழுதும் வாய்ப்புகள் வந்தன. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட சிவகார்த்தியேன், தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக உருவெடுத்தார்.

முதன் முதலில் 'கோலமாவு கோகிலா' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண வயசு’ பாடலை எழுதினார். அவர் எழுதிய முதல் பாடலே பட்டித்தொட்டி எங்கும் பரவி ஹிட் அடித்ததால், இசை ஆர்வலர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். தற்போது அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்குப் பாடல் எழுதி வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகயுள்ள, ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ’அரபிக் குத்து’ பாடலை எழுதியுள்ளார். இப்பாடலை உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில்  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

தனுஷ்

நடிகர் தனுஷ் தான் நடித்த '3' படத்தில் 'வொய் திஸ் கொலவெறி டி' பாடலை எழுதி, பாடினார்.  ஆங்கில வார்த்தைகள் உள்ள இந்த பாடல் இன்று வரை ரசிகர்களின் விருப்பமான பாடலாக உள்ளது. இந்த பாடலை பிக் பி - அமிதாப்பச்சன் உட்பட மில்லியன் கணக்கான இசை ஆர்வலர்கள் பாராட்டினர். 

இந்தப் பாடலின் மகத்தான வெற்றி தனுஷுக்கு இன்னும் உத்வேகத்தைக் கொடுத்து, வேலையைத் தொடரச் செய்தது. மேலும் தொடர்ந்து ‘காதல் என் காதல்’, ‘கடல் ராசா நான்’ மற்றும் ‘அம்மா அம்மா’ என வரிசையாக அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றன.

சிம்பு

குழந்தை நட்சத்திரமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சிலம்பரசன். இவர் நடிப்பது மட்டுமின்றி 2004 ஆம் ஆண்டு வெளியான 'மன்மதன்’ படத்தை இயக்கி, நடித்தார்.

அப்படத்தில் 'லூசு பெண்ணே' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. அடுத்தடுத்த படங்களில் 'எவன் டி உன்ன பெத்தான்' , 'டிரெண்ட் சாங்' உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதி பாடியுள்ளார். இவர் படம் இயக்குவது, பாடல் பாடுவது, பாடல் எழுதுவம், இசையமைப்பது என பன்முகத் திறமைக் கொண்டவராக வலம் வருகிறார்.

அதற்கு  மதிப்பளிக்கும் விதமாக வேல்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் இவருக்கு கவுர டாக்டர் பட்டம் வழங்கியது. 

Whats_app_banner

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.