Y.G.Mahendran: ‘கமல் திட்டமிட்டு புறக்கணித்தார்’ ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Y.g.mahendran: ‘கமல் திட்டமிட்டு புறக்கணித்தார்’ ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி!

Y.G.Mahendran: ‘கமல் திட்டமிட்டு புறக்கணித்தார்’ ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி!

HT Tamil Desk HT Tamil
Mar 14, 2023 06:19 AM IST

வீட்டில் மூத்த மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ரஜினி எனக்கு கொடுப்பார். திடீர்னு ஒரு நாள் ரஜினியை அறிமுகம் செய்து வைக்குமாறு லதா என்னிடம் கேட்டார். நான் தான் அறிமுகம் செய்து வைத்தேன்.

கமல் படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன்
கமல் படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன்

‘‘பார் மகளே பார் படம் தான் சிவாஜி உடன் முதலில் நடிக்க இருந்த படம். என்னை தான் முதலில் புக் பண்ணார்கள். எங்க அப்பாவிடம் பணம் வாங்கி, பள்ளி முழுவதும் ஸ்வீட் கொடுத்துவிட்டேன். சிவாஜி உடன் நடிப்பது அப்போ சாதாரண விசயமா? நான் பயங்கர மகிழ்ச்சியில் இருந்தேன்.

ஆரூர் தாஸ், பீம்சிங் எல்லாரும் டிஸ்கஷனில் அந்த ரோலை பெண்ணாக மாற்றிவிட்டார்கள். ஆரூர் தாஸ் தான் அதற்க காரணம். என் வாழ்க்கையே போன மாதிரி நொந்து போனேன். அந்த நேரத்தில் என் கையில் கத்தி இருந்திருந்தால், ஆரூர் தாஸை குத்தியிருப்பேன். அதை அவரிடமே கூறினேன். 

சிவாஜி சாரின் 63 வது படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்து, அதன் பின் 73வது படத்தில் கெளரவம் என்கிற படத்தில் தான் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன். கெளரவம் ஷூட்டிங் ஒரு காட்சியை பார்த்து எல்லாரும் கை தட்டினார்கள். நானும் நாகேஷூம் மட்டும் கை தட்டவில்லை. அதை சிவாஜி பார்த்துவிட்டார். 

‘என்னடா.. நீங்க ரெண்டு பேரும் ஹாலிவுட் நடிகர்களா? இதுக்கெல்லாம் பாராட்ட மாட்டீங்களா?’ என்று சிவாஜி கேட்டார். ‘ஆங்கில வார்த்தை உச்சரிப்பில், ஏதோ தவறு இருப்பதாக’ நாகேஷ் கூறினார். நானும் அதை அறிந்திருந்தேன். ‘உங்க அம்மா, எனக்கு ஸ்கூலில் அட்மிஷனா கொடுத்தாங்க, நான் சரியா பேச’ என்று, என்னிடம் சிவாஜி கேட்டார். அதன் பின் தவறு எந்த இடத்தில் என்று கேட்டுக் கொண்டு, அந்த காட்சியை மீண்டும் எடுக்க கூறினார். 

அப்போது யாரும் கை தட்டவில்லை, எங்களை அங்கிருந்து பார்த்தார் சிவாஜி, நன்றாக இருப்பதாக நாகேஷ் சைகை காண்பித்தார். அதன் பிறகு தான் சிவாஜி திருப்தியானார். கமலும் நானும் நல்ல ஜோடியாக வரவேற்பை பெற்றோம். முரட்டுக்காளைக்கு பிறகு தான் ரஜினி உடன் நடிக்க ஆரம்பித்தேன். 

கமலுடன் குரு படம் கமர்ஷியலாக ஹிட் ஆனது. அதன் பிறகு தான் நாங்கள் வெற்றி கூட்டணி ஆனோம், நல்ல நண்பர்கள் ஆனோம். அது மட்டுமல்லாமல் என் மனைவியும், கமல் மனைவி வாணியும் நல்ல நண்பர்கள். கமல் குடும்ப ரீதியாக எங்களுடன் நெருக்கமானார். ரஜினி உடன் தாமதமாக தான் பழகும் வாய்ப்பு வந்தது. 

இன்று பார்த்தால் கூட, கமலிடம் நீ, வா, போ என பேச முடியும். ஆனால், ரஜினியிடம் நீங்க வாங்க என்று தான் பேசுவேன். கமலை அதிகம் பார்க்க முடிவதில்லை. எப்போவாது போனில் பேசுவோம். அப்படி பேசினாலும் வா, போ என்று தான் பேசுவேன். போலி மரியாதை எனக்கு தரத் தெரியாது. 

பிந்நாளில் கமல் எனக்கு வாய்ப்பு தரவில்லை. அவரே வேண்டுமென்றே புறக்கணித்தார் என்று தான் தோன்றியது. நமக்கு என்று வருவது நமக்கு வரும். அதைப் பற்றி கவலைப்படவில்லை. எனக்காக கமலிடம் ராதா ரவி சண்டையிட்டார். அதை கமல் எந்த அளவிற்கு எடுத்துக் கொண்டார் என தெரியவில்லை. அதனால் எனக்கும் கமலுக்கும் நட்பு குறையவில்லை. ஆனால், படங்கள் குறைந்தது. அதுக்கு காரணம், கமலிடம் தான் கேட்க வேண்டும். 

ரஜினி சரிசமமாக வாய்ப்பு தருபவர். அவர் ரொம்ப ஓவராவும் பழக மாட்டார், தூரமாகவும் போக மாட்டார். வீட்டில் மூத்த மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ரஜினி எனக்கு கொடுப்பார். திடீர்னு ஒரு நாள் ரஜினியை அறிமுகம் செய்து வைக்குமாறு லதா என்னிடம் கேட்டார். நான் தான் அறிமுகம் செய்து வைத்தேன். 

திடீர்னு ஒரு நாள் ரஜினி போன் பண்ணி, ‘லதாவை கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்’ என்று கூறினார். நான் வேறு லதா என நினைத்து, ‘அதை ஏன் என்னிடம் கேட்குறீங்க?’ என்று கேட்டேன். ‘சார்… நான் சொல்றது, உங்க மனைவியின் தங்கை லதா…’ என்று ரஜினி கூறினார். அதன் பின், குடும்பத்தினர் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தேன்,’’
என்று அந்த பேட்டியில் ஒய்.ஜி.மகேந்திரன் கூறினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.