இனி கலக்கல் ஆரம்பம்! வின்டேஜ் எஸ்டிஆர்! புதுப்பட அப்டேட்டுடன் வந்த சிம்பு! இவரு தான் இயக்குனரா!
நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார்.

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கமலின் தக்லைஃப் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து அவரின் அடுத்த படம் குறித்தான ஒரு பதிவை அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உருவெடுத்துள்ளார்.
சிம்புவின் திரைப்பயணம்
நடிகர் சிம்பு இதுவரை சுமார் 49 படங்களில் நடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே அவரது தந்தை டி. ராஜேந்திரின் நடிப்பில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகானார். அதனைத் தொடர்ந்து அந்த காதல் படங்களில் நடித்து வந்தார். வித்தியாசமான கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தேர்ந்தெடுத்து நடிப்பதில் சிம்பு கைத்தேர்ந்தவர் ஆவார்.
இவரது திரைப்பயணத்தில் பல சவால்களையும் சந்தித்து உள்ளார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பிற்கு சரியாக வரவில்லை, சோம்பேறி சிம்பு என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக டாப் கியரில் சென்றுக் கொண்டிருக்கிறார். 2019 ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை இவரது படங்கள் எதுவும் சரிவர ஓட வில்லை. பின்னர் அந்த விமர்சனங்களில் இருந்து மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார்.