ஜென் z மோடில் சிம்பு! அவரே கொடுத்த அடுத்த படத்தின் அப்டேட்! குஷியில் சிம்பு ரசிகர்கள்!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கமலின் தக்லைஃப் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து அவரின் அடுத்த படம் குறித்தான ஒரு பதிவை அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கமலின் தக்லைஃப் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து அவரின் அடுத்த படம் குறித்தான ஒரு பதிவை அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உருவெடுத்துள்ளார்.
சிம்புவின் திரைப்பயணம்
நடிகர் சிம்பு இதுவரை சுமார் 49 படங்களில் நடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே அவரது தந்தை டி. ராஜேந்திரின் நடிப்பில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகானார். அதனைத் தொடர்ந்து அந்த காதல் படங்களில் நடித்து வந்தார். வித்தியாசமான கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தேர்ந்தெடுத்து நடிப்பதில் சிம்பு கைத்தேர்ந்தவர் ஆவார்.
இவரது திரைப்பயணத்தில் பல சவால்களையும் சந்தித்து உள்ளார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பிற்கு சரியா வரவில்லை, சோம்பேறி சிம்பு என கோலிவுட் வட்டாரங்கள் பேசின. மேலும் 2019 ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை இவரது படங்கள் எதுவும் சரிவர ஓட வில்லை. பின்னர் அந்த விமரசனங்களில் இருந்து மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார்.