Andhagan Twitter Review: கம்பேக் கொடுத்தாரா பிரசாந்த்.. அந்தகன் ட்விட்டர் விமர்சனம்!
Andhagan Twitter Review: நடிகர் பிரசாந்தின் உருவாகியுள்ள 50 ஆவது படமான அந்தகன் ட்விட்டர் பக்கத்தில் தங்களின் கருத்துகளை தெரிவித்து உள்ளார்.
Andhagan Twitter Review: நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த போதிலும் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்து வந்த படம் அந்தகன். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம்
பாலிவுட் பட ரீமேக்
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே நடித்து வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் தான், அந்தகன்.
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் மேஸ்ட்ரோ, மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.
அந்தகன் கதாபாத்திரம்
இந்த படங்களை தொடர்ந்து தற்போது தமிழிலும் உருவாகியிருக்கிறது. தமிழில் தபு கதாபாத்திரத்தில் சிம்ரனும், ஆயுஷ்மான் குர்ரானா கதாபாத்திரத்தில் பிரசாந்தும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்தும் நடித்து உள்ளார்கள். கார்த்திக் முக்கியத்துவம் மிக கேரக்டரில் நடித்து உள்ளார்.
வனிதா விஜயகுமார், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலரும் நடித்து உள்ளார்கள்.
பார்வையற்ற இசை கலைஞராக வரும் பிரசாந்த் தன்னை அறியாமலேயே ஒரு கொலையில் சிக்கி கொள்ள அதன் பின்னர் நடக்கும் திருப்பங்கள் தான் படத்தின் கதை என கூறப்படுகிறது. க்ரைம் த்ரில்லருக்கு ஏற்றார் போல் படத்தை உருவாக்கி உள்ளார்கள்.
இந்நிலையில் அந்தகன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டர் பக்கத்தில் தங்களின் கருத்துகளை தெரிவித்து உள்ளார்.
ட்விட்டர் விமர்சனம்
”அந்தகன் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெறுகிறார்.
ரீமேக்கிற்கு நியாயம் செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது. டாப் ஸ்டாருக்கு மகிழ்ச்சி ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
நீண்ட காத்திருப்பு
அந்தகன் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஒரு தகுதியான தமிழ் ரீமேக் வருகிறது.. தியாகராஜன். சரியான நடிகர்கள் தேர்வுகள் & சனாவின் வசீகரிக்கும் பின்னணி இசை. அதை ஒரு வசீகரிக்கும் காட்சியாக மாற்றியது.
பிரஷாந்த் மற்றும் சிம்ரன் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள், ஈர்க்கக்கூடிய முதல் பாதி மற்றும் இரண்டாவது பாதி. 'அந்தாடுன்' பாக்காதவங்களுக்கு ட்விஸ்ட் நல்லா வொர்க் ஆகும். பாடவங்களுக்கும் போரே அடிக்காம என்கேஜிங் ஆ இருக்கு. மொத்தத்தில், திருப்தியான அனுபவம். கண்டிபா பாகாலம்.
பாராட்டுக்குரிய முயற்சி
அந்தகன் ஒரு பாராட்டுக்குரிய முயற்சியாகும். இது அந்தாதுனின் சிலிர்ப்புகளையும் குளிர்ச்சியையும் வெற்றிகரமாக மீட்டெடுக்கிறது.
பிரசாந்தின் நடிப்பு முதன்மையானது. சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் அதை கட்டாயம் பார்க்க வேண்டும்.
அந்தகன் - அசாதாரண சீட் எட்ஜ் த்ரில்லர் அசல் பதிப்பைப் பார்த்தவர்களும் இந்த அற்புதமான நடிப்பை அனுபவிக்கிறார்கள்.
நடிகர் பிரசாந்த். ப்ரியா ஆனந்த் மற்றும் பார்க்க வேண்டும். தவறவிடாதீர்கள். டாப் ஸ்டார் மீண்டும் வந்து உள்ளார்.
ரொம்ப பாசிட்டிவா வருது
அந்தகன் ரிவ்யூ ரொம்ப பாசிட்டிவா வருது. பிரசாந்த் அவர்கள் மீண்டும் திரையில், அதுவும் நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு நல்ல திரைக்கதையில்.
பொன்னர் சங்கர் மூலம் அவரது திரைப்பயணத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்தவர்கள் இன்று என்ன நினைப்பார்கள்?
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்