சினிமாவை புரட்டிப்போட்ட நகைச்சுவை.. தனக்கான இடத்தை உருவாக்கிய நாயகன் தங்கவேலு
Comedian Thangavelu Birthday: நடிகர் கே. ஏ. தங்கவேலுவின் 107 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ் சினிமா இன்று வரை மிகப் பெரிய அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருவதற்கு காரணம் சிறப்பான கலைஞர்களின் படைப்புகளால் தான். ஒரு படைப்பு எந்த அளவிற்கு சிறப்பு பெறுகிறது என்றால் அதில் நடிக்கக்கூடிய கலைஞர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதே முக்கிய காரணமாகும்.
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகர்களாக விளங்கி வந்தவர்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் நடிகர் தங்கவேலு நகைச்சுவை நடிகராக இருந்த இவர். இன்றுவரை பல நகைச்சுவை நடிகர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
சினிமாவில் தனித்துவமான இடத்தை பெறுவது என்பது அவ்வளவு எளிது கிடையாது. தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துக் கொண்டு அதனை வெற்றியடைய செய்வது மிகப்பெரிய கடின உழைப்பால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட திறமையான நடிகர்களில் நகைச்சுவை நாயகனாக திகழ்ந்து வருபவர் தங்கவேலு.
கடினமான முயற்சியாழ் தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலை தெரிந்தாலும் 1952 ஆம் ஆண்டு வெளியான பணம் திரைப்படத்தின் மூலம் தங்கவேலு மிகவும் பிரபலமாக மாறினார். அந்த காலகட்டத்திலேயே 5000 ரூபாய் சம்பளம் ஆக பெற்றுள்ளார்.
வசூல் மன்னனாக தமிழ் சினிமாவை ஆண்டு வந்த எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் தங்கவேலு நடித்திருப்பார். காரைக்கால் சொந்த ஊராகக் கொண்ட தங்கவேலு பத்து வயது முதல் நாடகங்களில் நடித்த தொடங்கியுள்ளார்.
நாடகங்களில் நடிக்கக்கூடிய காலத்திலேயே நகைச்சுவை நடிகராக தன்னை வெளிக்காட்டியுள்ளார். கந்தசாமி முதலியார் நடத்திய நாடக குழுவில் என்.எஸ்.கிருஷ்ணனும், தங்கவேலுவும் மிக நெருக்கமாக பழகியவர்கள்.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர்கள் முதல் கடை கோடி இருந்த நடிகர்கள் வரை அனைவருடனும் இணைந்து இவர் நடித்துள்ளார். சிங்காரி என்ற திரைப்படத்தில் இவர் பேசிய வசனம் தான் பின்னாளில் டணால் என்ற பட்டப் பெயராக அமைந்தது. அதிலிருந்து இவர் டணால் தங்கவேலு என அழைக்கப்பட்டார்.
நகைச்சுவை நடிகையான எம். சரோஜாவை தங்கவேலு திருமணம் செய்து கொண்டார். தம்பதியின் நகைச்சுவை நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் ஜோடிக்கு பிறகு இவர்கள் இருவரும் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தம்பதி நகைச்சுவை ஜோடியாக புகழ்பெற்று விளங்கினர்
கிட்டத்தட்ட தங்கவேலு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார். கல்யாணப்பரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் தங்கவேலுவை உச்ச நடிகர்களில் ஒருவராக மாற்றியது. நண்பர்கள் கதாபாத்திரம் தொடங்கி வில்லன் கதாபாத்திலும் அனைத்து கதாபாத்திரங்களிலும் ஜொலித்தவர் இவர்.
இந்த மகா கலைஞனின் 107வது பிறந்தநாள் என்று கொண்டாடப்படுகிறது காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று நாயகர்களாக திரைத்துறையில் விளங்கக்கூடிய நடிகர்களுக்கு மத்தியில் இவருக்கென்று ஒரு சிறப்பு இடம் உண்டு என்று கூறினால் அது மிகை ஆகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்