Aravind Swamy: கோடீஸ்வரர் வீட்டு புள்ளை.. விபத்து.. விவாகரத்து.. மருந்துகள்.. ட்ரோல்கள்.. - அரவிந்த் தடம் புரண்ட கதை!
அரவிந்த் சாமி மீண்டெழுந்த கதை குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்த தகவல்கள் இவை!
“அரவிந்த்சாமி மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டுப்பிள்ளை. ஆனால் அவரது அப்பா அவருக்கு மிகவும் குறைவான பணத்தை தான் கொடுத்து வளர்த்தார். காரணம் எல்லாமே வீட்டிலேயே இருக்கிறது.
அரவிந்த்சாமிக்கு டாக்டராக வேண்டுமென்று ஆசை. ஆனால் அதன் பின்னர் பிசினஸ் பக்கம் அவரது வாழ்க்கை பக்கம் மாறியது. இந்த நிலையில் தான் அவர் மாடலிங்கில் ஈடுபட்டார் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து நண்பர்களோடு மிகவும் ஜாலியாக இருந்தார்.
மணி கண்ணில் மாட்டிய மணிரத்னம்
இதற்கிடையில் இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய தளபதி படத்திற்காக வட இந்தியாவில் இருந்து வரும் ஒரு கலெக்டர் தோற்றத்தில் ஒரு நடிகர் வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார் அதற்கான எல்லா வேலைகளும் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.
ஆனால் ஆடிஷன் செய்த நடிகர்கள் யாரும் மணிரத்னத்தை திருப்திப்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் ஒரு காபி விளம்பரத்தில் அரவிந்த்சாமி தோன்றியிருக்கிறார். அதைப் பார்த்த மணிரத்னம் ரஜினிகாந்தின் தம்பியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார். அது பின்னர் அரவிந்த் சாமி பல படங்களில் நடித்தார் . கதைத்தேர்வில் கோட்டை விட்டதால் படங்கள் தோல்வியை சந்தித்தன. அதன் பின்னர் அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டுக் கொண்டு ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் தான் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டதில் அவரால் நடக்க முடியாமல் போனது. இதற்காக அவர் பல மருந்துகளை எடுத்துக் கொண்டார். அதனுடைய விளைவு தான் மிகவும் குண்டாகி முடியெல்லாம் கொட்டி ஆளே அடையாளம் தெரியாதது போல மாறினார்.
முடிகொட்டி ஆளே மாறிப்போன அரவிந்த்
இது தொடர்பான ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அது மிகவும் ட்ரோல் செய்யப்பட்டது. அது அவரை மிகவும் பாதித்துவிட்டது. அதன் பின்னர் அவர் முழுவதுமாக ஜிம்மிலேயே நேரத்தைக்கழித்து, கடுமையாக டயட் இருந்து தன்னை அப்படியே மாற்றிக் கொண்டார். அதைப் பார்த்த பலரும் மிரண்டு போனார்கள். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் தான் அவர் விவகரத்து முடிவை எடுத்தார். அதன் பின்னர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் இரண்டுமே அரவிந்த் சாமியிடம் தான் வளர்கின்றன” என்று பேசினார்
நன்றி: ஆகாயம் தமிழ்!