கோடிகளில் கிடைக்கும் சம்பளம்.. தனியார் ஜெட் விமானங்கள் வைத்திருக்கும் பிரபலங்கள் யார் யார்?
தென்னிந்திய திரையுலகில் இருந்து சொந்தமாக விமானம் வைத்திருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் என்பதை பார்ப்போம் .
தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கும் தென்னிந்திய பிரபலங்கள் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தென்னிந்திய திரையுலகில் இருந்து சொந்தமாக விமானம் வைத்திருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் என்பதை பார்ப்போம் .
சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கையையே விரும்புகின்றனர். படங்களில் நடிப்பதற்கு கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள். அந்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும் , புத்தம் புதிய கார் வாங்குவதற்கும் செலவிடுகிறார்கள் . அந்த பணத்தில் சிலர் சொந்தமாக விமானம் வாங்கி உள்ளனர். அப்படிப்பட்ட தனி விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய பிரபலங்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம் .
மகேஷ் பாபு
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் மகேஷ் பாபு . இவருக்கு சொந்தமான தனி விமானம் உள்ளது. இந்த விமானத்தை குடும்பமாக உல்லாசப் பயணங்களுக்கும், தொழில் பயணங்களுக்கும் பயன்படுத்தி வந்துள்ளார் .
பிரபாஸ்
பாக்ஸ் ஆபிஸ் பாகுபலி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ் , சொந்தமாக தனி விமானம் வைத்துள்ளார். இந்திய அளவில் முன்னணி நடிகரான பிரபாஸ், பல்வேறு மாநிலங்களில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்க இந்த விமானத்தை பயன்படுத்தி வருகிறார்.
நாகார்ஜுனா
தெலுங்கு திரையுலகின் பணக்கார நடிகர்களில் நாகார்ஜுனாவும் ஒருவர் . சினிமாவைத் தாண்டி அவருக்கு பல தொழில்கள் உள்ளன. தனி ஜெட் விமானமும் வைத்திருக்கிறார். இந்த விமானத்தை நாகார்ஜுனா மட்டுமின்றி அவரது மகன்களான நாக சைதன்யா மற்றும் அகில் ஆகியோரும் பயன்படுத்துகின்றனர் .
ராம் சரண்
டோலிவுட்டில் பிரபலமான நடிகர் ராம் சரண். ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த பிறகு , அவரது மார்க்கெட் எகிறியது. தனி விமானமும் வைத்துள்ளார். அவர் தனது மனைவியுடன் பயணம் செய்ய இந்த விமானத்தைப் பயன்படுத்துகிறார். இந்த விமானத்தில் அவரது தந்தை சிரஞ்சீவியும் பயணம் செய்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார்
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவுக்கும் சொந்தமாக விமானம் உள்ளது. அவர் தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் பயணிக்க இந்த விமானத்தைப் பயன்படுத்துகிறார் . இதன் மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்