Top 10 Cinema News: 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் முதல் தங்கலான் முதல் நாள் வசூல் வரை - டாப் 10 சினிமா செய்திகள்-70th national film awards to thangalaan collection top 10 kollywood cinema news on august 16 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema News: 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் முதல் தங்கலான் முதல் நாள் வசூல் வரை - டாப் 10 சினிமா செய்திகள்

Top 10 Cinema News: 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் முதல் தங்கலான் முதல் நாள் வசூல் வரை - டாப் 10 சினிமா செய்திகள்

Aarthi Balaji HT Tamil
Aug 16, 2024 07:23 PM IST

Top 10 Cinema News: 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் முதல் தங்கலான் முதல் நாள் வசூல் விவகாரம் என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்

70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் முதல் தங்கலான் முதல் நாள் வசூல் வரை - டாப் 10 சினிமா செய்திகள்
70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் முதல் தங்கலான் முதல் நாள் வசூல் வரை - டாப் 10 சினிமா செய்திகள்

மேலும் ஒளி, ஒலி வடிவமைப்பு என மொத்தம் 4 விருதுகளுக்கு பொன்னியின் செல்வன் படம் தேர்வாகி உள்ளது.

 

திருச்சிற்றம்பலம் படத்திற்கு இரண்டு விருது

தமிழில் சிறந்த நடிகையாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடனத்திற்காக திருச்சிற்றம்பலமம் படத்தில் பணியாற்றி ஜானி மாஸ்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்னட படம்

சிறந்த கன்னட திரைப்படமாக கே.ஜி.எப் 2, சிறந்த மலையாள திரைப்படமாக சவுதி வெள்ளைக்கா படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விடாமுயற்சி அப்டேட்

நடிகர் அஜித் நடித்து இருக்கும், விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது . இந்த போஸ்டரில் நடிகர் நிகில் மேனனின் தோற்றம் இடம்பெற்று உள்ளது.

கார்த்திகேயா 2

கார்த்திகேயா 2 திரைப்படம் 70 ஆவது தேசிய விருதுகளில் சிறந்த தெலுங்கு திரைப்படப் பிரிவில் வென்றது. கார்த்திகேயா 2 தவிர, தெலுங்கில் இருந்து வேறு எந்த படமும் விருதை வாங்கவே இல்லை.

தங்கலான் முதல் நாள் வசூல்

நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இந்நிலையில் முதல் நாளில் உலகம் முழுவதும் 26.44 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு வீச்சில் விளம்பரம்

'கோட்' படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் முழு வீச்சில் விளம்பர பணியில் இறங்கி உள்ளது. AGS Cinemaவில் கோட் படத்தின் போஸ்டர்களை பெரிய அளவில் தயார் செய்து வைத்து உள்ளார்கள். அதற்கான வீடியோவையும் வெளியீட்டு உள்ளனர்.

54 ஆவது கேரளா மாநில திரைப்பட விருது

54 ஆவது கேரள மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த ஒப்பனை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை மற்றும் பிற பிரிவுகளில் ஆடு ஜீவிதம் படம் விருதுகளை வென்றது.

ராயான் ஓடிடி

ராயான் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடியில் ஆகஸ்ட் 23 அன்று ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

பாடலாசிரியர் விவேக் வீட்டில் விசேஷம்

பிரபல பாடலாசிரியர் விவேக்கின் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய், இயக்குநர் அட்லீ உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.