24 Years Of Vetri Kodi Kattu: வெளிநாட்டு வேலை ஆசை.. பாடம் புகட்டிய வெற்றிக் கொடி கட்டு
24 Years Of Vetri Kodi Kattu: குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எந்த நாடு, மாநிலங்கள் சென்றாவது வேலை செய்ய தயாராக இருக்கின்றனர். அதை சதகமாக மாற்றி பலரும் வேலைக்கு சேர்த்துவிடுவதாக சொல்லி மக்களை ஏமாற்றி காசு பார்க்கிறார்கள்.
24 Years Of Vetri Kodi Kattu: மனிதர்களாக பிறந்தால் பிழைப்புக்கு எதாவதது ஒரு வேலைக்கு செல்ல தான் வேண்டும். அவரவர்கள் படிப்புக்கு ஏற்றார் போல் வேலை செய்வார்கள். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எந்த நாடு, மாநிலங்கள் சென்றாவது வேலை செய்ய தயாராக இருக்கின்றனர். அதை சதகமாக மாற்றி பலரும் வேலைக்கு சேர்த்துவிடுவதாக சொல்லி மக்களை ஏமாற்றி காசு பார்க்கிறார்கள்.
வெற்றிக் கொடி கட்டு கதை
இதை உணர்வுபூர்வமாக இயக்குநர் சேரன் இயக்கிய படம் தான் வெற்றிக் கொடி கட்டு. முரளி , பார்த்திபன் தான் அந்த அப்பாவிகள். தங்கள் குடும்பத்தை எப்படியாவது முன்னோக்கி அழைத்து செல்ல வேண்டும் என்று எண்ணி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, வெளிநாடு செல்லும் நபர்களிடம் கட்டிவிடுகிறார். அவர் தான், ஆனந்தராஜ்.
சேகர் ( முரளி ) திருமணமான மனைவி மீனா, இரண்டு தங்கைகளுடன் வசித்தார். முத்து ( பார்த்திபன் ) அம்மா மனோரமா, இரண்டு தங்கைகளுடன் வசித்தார். இவர்கள் பணத்தை கட்டு ஏமாந்த நிலையில் ஒரு பக்கவான யோசனை செய்தனர். சேகர் வீட்டிற்கு முத்துவும், முத்து வீட்டிற்கு சேகரும் மாறி மாறி சென்றனர்.
சேகர் மீது காதலில் விழுந்த அமுதா
வெளிநாடுகளில் வேலை செய்வதாக நம்ப வைத்து இருவர்களின் குடும்பத்தையும் மாறி மாறி பார்த்து கொள்கின்றனர். முத்துவின் தங்கை அமுதா, சேகரை காதலிக்கிறார். இறுதியில் இவர்களின் பணமும் கிடைத்துவிடுகிறது. சேகரை தனது தங்கை அமுதாவிற்கே, முரளி திருமணம் செய்து வைக்கிறார்.
ஒரு பக்கம் முரளி , பார்த்திபன் படத்தை தாங்கி தூக்கினார்கள் என்றால் மறுபக்கம் வடிவேலு தனது பக்கம் உள்ள பாதியை தூக்கி சென்றார். குறிப்பாக துபாய் ஆடை, பார்த்திபனுடன் ஏற்படும் சண்டை வேடிக்கையாக இருக்கும். அவரின் நகைச்சுவை இந்த படத்தில் நன்றாக ஒர்க் அவுட்டானது. இன்று வரை பலரின் விருப்பமான பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கிறது.
சேரனின் மாஸ்டர் பீஸ்
இறுதியாக நம் நாட்டில் தான் நாம் உழைக்க வேண்டும். அயல்நாடுக்கு சென்று ஏன் உழைத்து நம் நாட்டை விட்டு போக வேண்டும் என்று முரளி , பார்த்திபன் பேசிய வசனம் ரசிகர்களின் கை தட்டல்களை பெற்றது. படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் கொண்டாடப்பட்டது. மொத்தமாக சேரனின் மாஸ்டர் பீஸ் வெற்றிக் கொடி கட்டு.
இந்த திரைப்படம் மற்ற சமூகப் பிரச்னைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. அது மட்டுமில்லாமல் சிறந்த திரைப்படம் , சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் உள்ளிட்ட மாநில திரைப்பட விருதுகளை வென்றது. இன்றும் தொலைக்காட்சியில் வெற்றிக் கொடி கட்டு படம் போட்டப்பட்டால் ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்