பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற பதவிக் காலம் முடியும் தேதி
தேர்தல்கள் 2024
எண் | மாநிலம் | தேர்தல் ஆண்டு | பதவிக்காலம் | சட்டமன்ற தொகுதிகள் | மக்களவை தொகுதிகள் | மாநிலங்களவை |
---|---|---|---|---|---|---|
1 | லோக்சபா தேர்தல் | 2024 | ஏப்ரல்-மே 2024 | NA | 545 | NA |
2 | ஆந்திரப் பிரதேசம் | 2024 | ஏப்ரல்-மே 2024 | 175 | 25 | 11 |
3 | அருணாசலப் பிரதேசம் | 2024 | ஏப்ரல்-மே 2024 | 60 | 2 | 1 |
4 | ஒடிசா | 2024 | ஏப்ரல்-மே 2024 | 147 | 21 | 10 |
5 | சிக்கிம் | 2024 | ஏப்ரல்-மே 2024 | 32 | 1 | 1 |
6 | ஹரியானா | 2024 | ஹரியானா 2024 4 நவம்பர், 2019 - 4 நவம்பர், 2024 | 90 | 10 | 5 |
7 | மகாராஷ்டிரா | 2024 | மகாராஷ்டிரா 2024 27 நவம்பர், 2019 - 26 நவம்பர், 2024 | 288 | 48 | 19 |
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் அட்டவணை
எண் | மாநிலம் | தேர்தல் ஆண்டு | பதவிக்காலம் | சட்டமன்ற தொகுதிகள் | மக்களவை தொகுதிகள் | மாநிலங்களவை |
---|---|---|---|---|---|---|
1 | சத்தீஸ்கர் | 2023 | சத்தீஸ்கர் 2024 4 ஜனவரி, 2019 - 3 ஜனவரி, 2024 | 90 | 11 | 5 |
2 | மிசோரம் | 2023 | மிசோரம் 2023 18 டிசம்பர், 2018 - 17 டிசம்பர், 2023 | 40 | 1 | 1 |
3 | மத்தியப் பிரதேசம் | 2023 | மத்திய பிரதேசம் 2024 7 ஜனவரி, 2019 - 6 ஜனவரி, 2024 | 230 | 29 | 11 |
4 | ராஜஸ்தான் | 2023 | ராஜஸ்தான் 2024 15 ஜனவரி, 2019 - 14 ஜனவரி, 2024 | 200 | 25 | 10 |
5 | தெலங்கானா | 2023 | தெலுங்கானா 2024 17 ஜனவரி, 2019 - 16 ஜனவரி, 2024 | 119 | 17 | 7 |
6 | ஆந்திரப் பிரதேசம் | 2024 | ஏப்ரல்-மே 2024 | 175 | 25 | 11 |
7 | அருணாசலப் பிரதேசம் | 2024 | ஏப்ரல்-மே 2024 | 60 | 2 | 1 |
8 | ஒடிசா | 2024 | ஏப்ரல்-மே 2024 | 147 | 21 | 10 |
9 | சிக்கிம் | 2024 | ஏப்ரல்-மே 2024 | 32 | 1 | 1 |
10 | ஹரியானா | 2024 | ஹரியானா 2024 4 நவம்பர், 2019 - 4 நவம்பர், 2024 | 90 | 10 | 5 |
11 | மகாராஷ்டிரா | 2024 | மகாராஷ்டிரா 2024 27 நவம்பர், 2019 - 26 நவம்பர், 2024 | 288 | 48 | 19 |
12 | ஜார்க்கண்ட் | 2025 | ஜார்க்கண்ட் 2025 6 ஜனவரி, 2020 - 5 ஜனவரி, 2025 | 81 | 14 | 6 |
13 | டெல்லி | 2025 | டெல்லி 2025 24 பிப்ரவரி, 2020 - 23 பிப்ரவரி, 2025 | 70 | 7 | 3 |
14 | பீகார் | 2025 | பீகார் 2025 23 நவம்பர், 2021 - 22 நவம்பர், 2025 | 243 | 40 | 16 |
15 | அஸ்ஸாம் | 2026 | அசாம் 2026 21 மே, 2021 - 20 மே, 2026 | 126 | 14 | 7 |
16 | கேரளா | 2026 | கேரளா 2026 24 மே, 2021 - 23 மே, 2026 | 140 | 20 | 9 |
17 | தமிழ்நாடு | 2026 | தமிழ்நாடு 2026 11 மே, 2021 - 10 மே, 2026 | 234 | 39 | 18 |
18 | மேற்கு வங்கம் | 2026 | மேற்கு வங்கம் 2026 8 மே, 2021 - 7 மே, 2026 | 294 | 42 | 16 |
19 | புதுச்சேரி | 2026 | புதுச்சேரி 2026 16 ஜூன், 2021 - 15 ஜூன், 2026 | 30 | 1 | 1 |
20 | கோவா | 2027 | கோவா 2027 15 மார்ச், 2022 - 14 மார்ச், 2027 | 40 | 2 | 1 |
21 | மணிப்பூர் | 2027 | மணிப்பூர் 2027 14 மார்ச், 2022 - 13 மார்ச், 2027 | 60 | 2 | 1 |
22 | பஞ்சாப் | 2027 | பஞ்சாப் 2027 17 மார்ச், 2022 - 16 மார்ச், 2027 | 117 | 13 | 7 |
23 | உத்தரகண்ட் | 2027 | உத்தரகண்ட் 2027 29 மார்ச், 2022 - 28 மார்ச், 2027 | 70 | 5 | 3 |
24 | உத்தரப் பிரதேசம் | 2027 | உத்தரபிரதேசம் 2027 23 மே, 2022 - 22 மே, 2027 | 403 | 80 | 31 |
25 | குஜராத் | 2027 | குஜராத் 2027 12 டிசம்பர், 2022 - 11 டிசம்பர், 2027 | 182 | 26 | 11 |
26 | இமாச்சலப் பிரதேசம் | 2027 | இமாச்சல பிரதேசம் 2027 12 டிசம்பர், 2022 - 11 டிசம்பர், 2027 | 68 | 4 | 3 |
27 | மேகாலயா | 2028 | மேகாலயா 2028 23 மார்ச், 2023 - 22 மார்ச், 2028 | 60 | 2 | 1 |
28 | நாகாலாந்து | 2028 | நாகாலாந்து 2028 23 மார்ச், 2023 - 22 மார்ச், 2028 | 60 | 1 | 1 |
29 | திரிபுரா | 2028 | திரிபுரா 2028 23 மார்ச், 2023 - 22 மார்ச், 2028 | 60 | 2 | 1 |
30 | கர்நாடகா | 2028 | கர்நாடகா 2028 17 மே, 2023 - 16 மே, 2028 | 224 | 28 | 12 |
பல்வேறு மாநிலங்களின் தேர்தல் அட்டவணை
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஆண்டு நடந்து முடிந்தது. 2024 ம் ஆண்டில் லோக் சபா தேர்தல் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறவுள்ளது. ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கம், ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது
ஆந்திரப் பிரதேசம்: ஆந்திரப் பிரதேச சட்டசபை தேர்தல் 2024 அட்டவணை
2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல், மாநிலத்தின் 175 சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க மே 2024 க்கு முன் நடைபெற உள்ளது. ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 11 ஜூன் 2024 அன்று முடிவடைகிறது. இந்த மாநிலத்திற்கு கடைசியாக சட்டமன்றத் தேர்தல் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு, ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாநில அரசை அமைத்து ஆட்சி புரிந்து வருகிறது. 175 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் 88 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியால் ஆட்சியமைக்க முடியும். முக்கியமான எதிர்க்கட்சியாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேலுங்கு தேசம் கட்சி உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையே இந்தத் தேர்தலிலும் வலுவான போட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருணாசலப் பிரதேசம்: அருணாசலப் பிரதேச சட்டசபை தேர்தல் 2024 அட்டவணை
2024ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு ஜூன் 2 அன்று முடிவடைய உள்ளது. முந்தைய சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 2019 இல் நடைபெற்றன. தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி மாநில அரசாங்கத்தை அமைத்தது, பெமா காண்டு முதலமைச்சரானார். முக்கியமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி இங்கு உள்ளது. மொத்தம் 60 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் 31 இடங்களில் ஜெயித்தால் ஆட்சி அமைக்கலாம். கடந்த முறை பாஜக 49 தொகுதிகளில் ஜெயித்தது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா: ஒடிசா சட்டசபை தேர்தல் 2024 அட்டவணை
2024 ஆம் ஆண்டு ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒடிசா சட்டமன்றத்தின் பதவிக்காலம் 24 ஜூன் 2024 அன்று முடிவடைகிறது. முந்தைய சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 2019 இல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு, பிஜு ஜனதா தளம் மாநில அரசாங்கத்தை அமைத்தது, நவீன் பட்நாயக் முதலமைச்சரானார். மொத்தம் 147 தொகுதிகளைக் கொண்ட ஒடிசாவில் 74 இடங்களில் ஜெயித்தால் ஆட்சி அமைக்க முடியும். கடந்த தேர்தலில் 114 இடங்களை கைப்பற்றியது பிஜு ஜனதா தளம் கட்சி. பாஜக 22 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களை கைப்பற்றியது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் நீண்ட காலமாக மாநில முதலமைச்சராக பணிபுரிந்தவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். தொடர்ச்சியாக 20 ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சராக உள்ளார் நவீன் பட்நாயக்.
சிக்கிம்: சிக்கிம் சட்டசபை தேர்தல் 2024 அட்டவணை
11வது சிக்கிம் சட்டமன்றத்தின் 32 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2024இல் தேர்தல் நடைபெறவுள்ளது.சிக்கிம் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2 ஜூன் 2024 அன்று முடிவடைகிறது. முந்தைய சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 2019 இல் நடைபெற்றன. தேர்தலுக்குப் பிறகு, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மாநில அரசாங்கத்தை அமைத்தது, பிரேம் சிங் தமாங் முதல்வரானார். சிக்கிம் ஜனநாயக முன்னணி 16 இடங்களை கைப்பற்றிய நிலையில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 19 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
ஹரியானா: ஹரியானா சட்டசபை தேர்தல் 2024 அட்டவணை
2024 ஆம் ஆண்டு ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபரில் அல்லது அதற்கு முன்னதாக நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஹரியானா சட்டமன்றத்தின் பதவிக்காலம் 3 நவம்பர் 2024 அன்று முடிவடைகிறது. முந்தைய சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 2019 இல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சியின் கூட்டணி, மாநிலத்தில் அரசாங்கத்தை அமைத்தது, மனோகர் லால் கட்டார் முதலமைச்சரானார். மொத்தம் 90 இடங்களில் 46 தொகுதிகளில் ஜெயிக்கும் கட்சி ஆட்சி அமைக்க முடியும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த தேர்தலில் 41 இடங்களில் ஜெயித்தது. ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளில் ஜெயித்து பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தது. காங்கிரஸ் கட்சி 30 இடங்களில் வெற்றி கண்டது.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் 2024 அட்டவணை
அடுத்த மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் 2024 அக்டோபரில் அல்லது அதற்கு முன்னதாக நடத்தப்படவுள்ளது. முந்தைய சட்டமன்றத் தேர்தல் 2019 அக்டோபரில் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி NDA ஆட்சி அமைக்க அறுதிப் பெரும்பான்மை பெற்றது, ஆனால் உட்கட்சி மோதல் காரணமாக, சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் புதிய கூட்டணியை அமைத்து, மாநில அரசாங்கத்தை அமைத்தது. உத்தவ் தாக்கரே முதலமைச்சரானார். 2022 மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடிக்குப் பிறகு, ஏக்நாத் ஷிண்டே 40 எம்எல்ஏக்களுடன் சேர்ந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடிக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் அணியும் ஆளும் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்தது. பல்வேறு திடீர் திருப்பங்களை கண்ட மகாராஷ்டிரத்தில் இந்த ஆண்டு தேர்தலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இவரது சிவசேனா கட்சி, பாஜக, தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் கூட்டணி ஆட்சியில் உள்ளது.
பிரேம் சிங் தமாங் முதல்வராக பதவி வகித்து வருகிறார். சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது.
ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.
ஒடிசாவில் அசைக்க முடியாத சக்தியாக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி இருந்து வருகிறது. அதனால், இந்த முறையும் அந்த மாநிலத்தில் நடக்கும் இந்தக் கட்சி ஜெயிக்கவே வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனாலும், தேர்தலில் எதுவும் நடக்க வாய்ப்பு இருப்பதால், தேர்தல் முடிவு வெளியான பிறகே யார் ஆட்சி அமைப்பார்கள் என தெரியவரும்.