Rajasthan Exit Polls 2023: ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பு! தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு சொல்வது என்ன?
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றன.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநில தேர்தலுக்குமான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பெரும்பான்மையை பெறுவதற்கு 100 தொகுதிகளில் வெற்றி பெர வேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு இந்த முறை பாஜக - காங்கிரஸ் இடையே இருமுனை போட்டியாக நிலவியுள்ளது. இந்த இரு கட்சிகளுடன் மூன்றாவது பெரிய கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்டுள்லது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பெரும்பான்மைக்கு தேவையான 100 இடங்களில் பாஜக அதிகபட்சமாக 128 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அதிகபட்சமாக 106 இடங்கள் வரை வெல்லலாம் எனவும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மேற்கொண்ட நிறுவனங்களின் கணிப்புகளின் முழு விவரம்
இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா
பாஜக - 80 முதல் 100
காங்கிரஸ் - 86 முதல் 106
இதர கட்சிகள் - 9 முதல் 18
டைம்ஸ் நவ் - ஈடிஜி ஆய்வு
பாஜக - 108 முதல் 128
காங்கிரஸ் - 56 முதல் 72
இதர கட்சிகள் - 13 முதல் 21
ஜான் கி பாத்
பாஜக - 100 முதல் 122
காங்கிரஸ் - 62 முதல் 85
இதர கட்சிகள் - 14 முதல் 15
டிவி9 பாரத்வர்ஷ் - போல்ஸ்ராட்
பாஜக - 100 முதல் 110
காங்கிரஸ் - 90 முதல் 100
இதர கட்சிகள் - 5 முதல் 15
டாபிக்ஸ்