தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ramadoss: "தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களித்தோருக்கு நன்றி"- ராமதாஸ்

Ramadoss: "தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களித்தோருக்கு நன்றி"- ராமதாஸ்

Karthikeyan S HT Tamil
Apr 19, 2024 09:09 PM IST

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் எண்ணத்தில் பெருமளவிலான மக்கள் பாமக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக உணர முடிகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் 18-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் மக்கள் கடும் வெயிலையும் கடந்து ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றி சென்றுள்ளனர்.தமிழகத்தின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் சராசரியாக 70 விழுக்காட்டுக்கும் கூடுதலான வாக்குகள் பதிவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவின் அளவு, வாக்காளர்களின் உடல் மொழி, பொதுவான மக்களின் மனநிலை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த தேர்தலில் கிடைத்த முடிவுகளை மாற்ற வேண்டும்; மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் எண்ணத்தில் பெருமளவிலான மக்கள் பாமக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக உணர முடிகிறது.

தமிழகத்தில் மக்களவை பிரதிநிதித்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்காக மிகச் சிறந்த முறையில் களப்பணியாற்றிய அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும், ஆதரவு தந்த அமைப்புகளுக்கும் பாமக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று அவர் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024:

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

950 பேர் போட்டி:

தமிழகம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும், தென் சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 6 தொகுதிகளில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்