தமிழ் செய்திகள்  /  Elections  /  Lok Sabha Polls 2024: Tamil Nadu Registers 72.09% Voter Turnout

TN Lok Sabha election: தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு..39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம்!

Karthikeyan S HT Tamil
Apr 19, 2024 09:32 PM IST

TN Lok Sabha election 2024: தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார்.

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

அதிகப்படியாக கள்ளக்குறிச்சி 75.67%, தருமபுரி 75.44% சிதம்பரத்தில் 74.87% வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35% வாக்குகள் பதிவாகி உள்ளது. தென் சென்னையில் 67.82%, மதுரையில் 68.98%, வட சென்னையில் 69.26% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 69% இருந்தது இப்போது 72.09% ஆக உள்ளது. கடைசி வாக்காளர் வரை வாக்கு அளித்த பின்னர் நாளை 12மணிக்கு இறுதி விபரங்கள் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்திலிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. தேர்தல் நடைபெறும் அண்டை மாநில எல்லைகளில் தற்பொழுது உள்ள நிலை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம். வாக்கு இயந்திரம் தொடர்பான புகார் பெரிதாக வரவில்லை. ஒரு கட்சியிலிருந்து மட்டும் புகார் அளித்துள்ளார்கள் அது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம் என கூறினார்.

தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்:

கள்ளக்குறிச்சி - 75.67%

தருமபுரி - 75.44%

சிதம்பரம் - 74.87%

பெரம்பலூர் - 74.46%

நாமக்கல் - 74.29%

கரூர் - 74.05%

அரக்கோணம் - 73.92%

ஆரணி -73.77%

சேலம் - 73.55%

விழுப்புரம் - 73.49%

திருவண்ணாமலை -73.35%

வேலூர் - 73.04%

காஞ்சிபுரம் - 72.99%

கிருஷ்ணகிரி - 72.95%

கடலூர் - 72.40%

விருதுநகர் - 72.29%

பொள்ளாச்சி - 72.22%

நாகப்பட்டினம் - 72.21%

திருப்பூர் - 72.02%

திருவள்ளூர் - 71.87%

தேனி - 71.74%

மயிலாடுதுறை - 71.45%

ஈரோடு - 71.42%

திண்டுக்கல் - 71.37%

திருச்சிராப்பள்ளி - 71.20%

கோயம்புத்தூர் - 71.17%

நீலகிரி - 71.07%

தென்காசி - 71.06%

சிவகங்கை - 71.05%

ராமநாதபுரம் - 71.05%

தூத்துக்குடி - 70.93%

திருநெல்வேலி - 70.46%

கன்னியாகுமரி - 70.15%

தஞ்சாவூர் - 69.82%

ஸ்ரீபெரும்புதூர்-69.79%

வட சென்னை - 69.26%

மதுரை - 68.98%

தென் சென்னை - 67.82%

மத்திய சென்னை - 67.35%

மொத்தம் - 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024:

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முன்னதாக, தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்