Lok Sabha Election 2024 Results: "பழுக்காத பலா"..ராமநாதபுரத்தில் வரலாற்று தோல்வியை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம்!
Lok Sabha Election 2024 Results: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சையாக களமிறங்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியை சந்தித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 04) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது வருகிறது. இதில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
நவாஸ் கனி வெற்றி முகம்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி 466593 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் களமிறங்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 313296 பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இதன்மூலம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரின் வெற்றி உறுதியாகி உள்ளது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் தற்போதைய நிலவரம்
நவாஸ் கனி (IUML) - 466593
ஓ.பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 313296
ஜெயபெருமாள் (அதிமுக) - 92134
சந்திர பிரபா ஜெயபால் (நாதக) - 89160
ஓபிஎஸ் முதல்முறை தோல்வி
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை தான் போட்டியிட்ட தேர்தலில் தோல்வியையே சந்திக்காத, நிலையில் முதல்முறையாக ராமநாதபுரத்தில் சுயேட்சையாக களமிறங்கி தோல்வியை சந்தித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் தோல்வி முகம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 950 வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
எதிர்பார்ப்பில் மக்கள்
அடுத்த 5 ஆண்டுகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆட்சி செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். உலகமே உற்று நோக்கும் இந்தியாவில் ஏற்கனவே 2 முறை ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா.. பிரதமர் மோடி 3 ஆவது முறையாக ஆட்சி அமைப்பாரா.. அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இணைந்துள்ள இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்