October 2024: அக்டோபரில் நிகழும் சூரிய கிரகணம்! இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!-zodiac signs cancer leo scorpio key precautions for the october solar eclipse - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  October 2024: அக்டோபரில் நிகழும் சூரிய கிரகணம்! இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

October 2024: அக்டோபரில் நிகழும் சூரிய கிரகணம்! இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

Kathiravan V HT Tamil
Oct 01, 2024 08:45 PM IST

October 2024: அக்டோபர் 10ம் தேதி புதன் பகவான் துலாம் ராசிக்குள் நுழைகிறார். அக்டோபர் 17ஆம் தேதி அன்று சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார்.

October 2024: அக்டோபரில் நிகழும் சூரிய கிரகணம்! இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!
October 2024: அக்டோபரில் நிகழும் சூரிய கிரகணம்! இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்! (i stock)

அக்டோபர் 10ம் தேதி புதன் பகவான் துலாம் ராசிக்குள் நுழைகிறார். அக்டோபர் 17ஆம் தேதி அன்று சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார்.

அக்டோபர் 09-ஆம் தேதி அன்று ரிஷபம் ராசியில் இருக்கும் குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். அக்டோபர் 13ஆம் தேதி சுக்கிரன் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

அக்டோபர் 20ஆம் தேதி செவ்வாய் பகவான் கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 03 ஆம் தேதி சனி பகவான் சதயம் நட்சத்திரத்தில் நுழைகிறார். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை நாட்டின் 12 ராசிகளையும் பாதிக்கும்.

அக்டோபர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:-

ஜோதிடர் பண்டிட் நரேந்திர உபாத்யாய் கருத்துப்படி, கடகம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார். 

இந்த ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் நிலை சாதகமாக இருக்காது. மாத தொடக்கத்தில் சூரிய கிரகணமும் நடைபெறுகிறது. இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இந்த மூன்று ராசிக்காரர்களும் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுப்பதை நிறுத்துவது நல்லது. விவாதத்தில் இருந்து விலகி இருப்பது நல்லது.

நாளை நிகழும் சூரிய கிரகணம் 
புதன் கிழமையான நாளை மஹாளய அமாவாசை உள்ளது. அதே வேளையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமும் நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி, சூரிய கிரகணம் அக்டோபர் 3 ஆம் தேதி இரவு 09:12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாலை 03:17 மணிக்கு முடிவடையும். சர்வ பித்ரு அமாவாசை அன்று சூரிய கிரகணம் 12 ராசிகளையும் பாதிக்கும். ஆச்சார்யரின் கூற்றுப்படி, இந்த கிரகணம் பொதுமக்களுக்கு மங்களகரமானதாக இருக்கப் போவதில்லை.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner